பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இவ்வாறு உட்கார்ந்து, கைகளை சமநிலையுடன் வைத்த பிறகு கைகளை தரையில் ஆழ்ந்து ஊன்றி பத்மாசன இருக்கையுடன் உடலை மேற் புறமாகத் தூக்கி யவுடன் உயர்த்த வேண்டும். அப்பொழுது உடல் நிமிர்ந்த நி ைல யி ல' வி ைற ப ப ா க இருக்க வேண் டும். பத்மாசன அமைப்பிலிருந்து நழுவி விடாமல், முழங்கால் பகுதிகள் கீழே இறங்கி விடாமல் சரியான அளவில் இருக்கவேண்டும். (படம் காண்க) பயன்கள்: பத்மாசனத்திற்குக் கிடைக்கும் அத்தனைப் பயன்களும் இதில் கிடைக்கும் மேலும், கைகளுக்கும் தசைகள் எலும்புகளுக்கும் நல்ல வலிமை கிடைக்கும். ஆழ்ந்த சுவாசத்தினால் நுரையீரல் நல்ல செழுமை அடைகிறது. எண்ணிக்கை 1. பத்மாசன அமைப்புக்கு வருதல். 2. கைகளை ஊன்றி உடலைத் தூக்குதல்.