பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 57 - -o-o-o-o: 5. யோக முத்ரா விளக்கம்: பத்மாசனத்தில் அமர்ந்துதான் இந்த ஆசனத்தைத் தொடரவேண்டும். குனிந்து செய்யும் ஆசனம் இது. - மத தி யா சனம் என்ற ஆசனத்தில், பதமாசனம அமைப்பில் இ ரு ந து பி ன பு ற மாக வளையவேண்டும். யோக முத்ராவில் முன்புறம் வளைய வேண்டும். செயல்முறை: விரிப்பின் மீது முதலில் பத்மாசனத்தில் அமரவும் பிறகு, கைகளைப் பின்புறமாகக் கொண்டுவந்து, வலதுகை மணிக்கட்டுப் பகுதியை இடது கையால் பற்றிப் பிடித்துக்கொள்ளவும். ஆனால், கைகளை இறுக்கி, வலிந்து பிடிக்கக்கூடாது. இவ்வாறு கைகளை சேர்த்துக்கொண்டபிறகு, மெதுவாக முன்புறமாகக் குனிந்து, முன் நெற்றியால் தரையினைத் தொடவேண்டும். (கைகளைப் பின்புறமாகக் கட்டாமல், கட்டை விரல் களையும் பிடித்துக் கொள்ளலாம்). மீண்டும், பழைய பத்மாசன நிலைக்கு வந்துவிடவும். குனியும் போது மூச்சை வெளியேவிட்டு, பிறகு பத்மாசன நிலை வந்ததும், ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுக்கவேண்டும். 10 வினாடிகள் யோக முத்ராவில் இருக்கலாம்.