பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் Ꮾ3 பிறகு, முன் புறமாகக் குனிந்து, இடது கையால் இடது கால் பெருவிரலையும், வலது கையால் வலது கால் பெருவிரலையும் பிடித்துக் கொண்டு, அவைகளை இழுக்கும் பாவனையில், முன்புறமாகக் கு னி ய கால களை இ மடக்காமல் , தரையைவிட்டு மேலே கால்கள் வராமல், மேலும்மேலும் குனிந்து சென்று, முழங்கால்களின் மீது முகம் படும்படி வைக்கவும். அதே நிலையில் 5 வினாடி இருக்கலாம். பிறகு, மெதுவாக எழுந்து முன் உட்கார்ந்த நிலைக்கு வரவும். ஆரம்ப காலத்தில், கட்டை விரல்களைத் தொடுவதே கடினமாக இருக்கும். அதற்காக தைரியத்தை இழக்காமல், முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி செய்தால், விரைவில் இது எளிதாகிவிடும். முடியாதபோது மனக்கவலையுடன், வேதனையுடன் ஆசனத்தை முழுமையாகச் செய்ய முயற்சிக்கக் கூடாது. உடல் உறுப்புக்களுக்கு இன்பமளிக்கும் வகையில் தான் ஆசனத்தைப் பழக வேண்டும். ஹடயோக ஆசனங்களில், இதுதான் முதல்தரமான பயிற்சி என்று ஆசன வல்லுநர்கள் கூறுகின்றார்கள் 轟 பயன்கள்: இடுப்பு வளைவதால், இடுப்புப் பகுதிகளுக்கு, நிறைய இரத்த ஓட்டம் செல்லுகிறது. அந்தப் பகுதிகள் செழுமையடைகின்றன. வயிற்றுத்தசைகள் மடிந்து