பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 65 தொடை எலும்பும் இணைகின்ற முனைப்பகுதியில் படுவதுபோல வைக்கவேண்டும். (படம் பார்க்கவும்) பிறகு, முன்புறமாகக் குனிந்து, இரு கைகளாலும் வலது கால் கட்டைவிரலைத் தொடவும். அதன் பின்னர் மெதுவாகக் கீழே குனிந்து, சென்று, வலது முழங்காலை முகம் தொடுவதுபோல வைக்கவும். குனியும்போது மூச்சை வெளியே விட்டு, குனிந்தால் எளிதாகத் தொடலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். அல்லது 6 வினாடி நேரம்வரை இந்த இருக்கையில் இருக்கலாம் o ஜனுராசனம் எளிதாகச் செய்தால், பச்சி மோட்டாசனம் செய்வது இன்னும் எளிதாக வரும். s HIH Too - க வலது காலைத் தொடுவது GLTeుడిమి, இடது காலையும் தொடுவதுபோல் மாற்றி மாற்றிச் செய்யலாம். பயன்கள்: சோம்பலைப் போக்கி சுறுசுறுப்புடன் இருக்கத் துண்டுகிறது. உடலுக்குப் பொதுவான நலத்தையும், பலத்தையும் பெருக்குகிறது. முதுகு எலும்பை நன்கு வளைத்து பணியாற்றச் செய்கிறது. முதுகுத் தசைகளுக்கு நன்கு வலிமையூட்டுகிறது. வயிற்றுத் தசைகளை வலிமையாக்கி ஜீரண சக்தியை மிகுதிப்படுத்துகிறது. மூல நோயைக் குணமாக்குகிறது. எண்ணிக்கை 1. கால்களை நீட்டி அமர்ந்து, இடது காலை மடித்து வைத்து, முகத்தால் வலது முழங்காலைத் தொடவும். 2. கால்களை நீட்டி அமரவும். பிறகு, மறுகாலுக்கு இதே எண்ணிக்கையில் ஆசனத்தைத் தொடரவும்.