பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏮ டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 10. கோமுகாசனம் பெயர் விளக்கம்: கோ என்ற வடமொழிச் சொல்லுக்கு பசு என்பது பொருளாகும். கோமுகம் என்றால் பசு முகம் என்பதாகும். ஆசனத்தை செய்து பார்க்கும்போது, முடிவான இருக்கையில் செய்பவரின் தோற்றம் பசு முகம்போல தோற்றமளிப்பதால் இதற்குப் பெயர் அமைந்தது போலும். செயல் முறை: இடது காலை முழங்கால் மடிய வளைத்து, பின்புறமாகக் கொண்டு சென்று, அந்த இடது காலின் மீது அமரவும். அந்த முழங்கால், தரையின் மீது இருப்பதுபோலவே வைத்திருக்கவும். பிறகு, வலது காலை வளைத்து, இடது காலுக்கு மறுபுறம் கொண்டுசெல்லவும். அப்பொழுது, வலது முழங்கால், இடது முழங்காலுக்கு மேலாக இருப்பது போல இருக்க வேண்டும். வலது பாதத்தை இடது பிட்டத்துக்கு அருகில் கொண்டு வரவும். -- பிறகு, கைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைக் கவனிக்க வேண்டும். வலது கையை முழங்கை மடிய கீழ்ப்புறமாக வளைத்து முதுகுப்புறம் கொண்டு வந்து, இடது கையை வளைத்து தலைக்குமேலாகப் பின்புறம் கொண்டு சென்று. பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். உடலை நிமிர்த்தி விறைப்பாக வைத்திருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து மறுகாலில் இதேபோல் அமர்ந்து மீண்டும் கோமுகாசனம் செய்யவும். சுவாசம் இயல்பாக இருக்கவேண்டும்.