பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா _ எண்ணிக்கை 1. வலது காலை மடித்து வைத்து இடது காலை மாற்றி வைத்து, வலதுகையால் இடது காலைப் பிடித்து, இடது கையால் வலது தொடையைப் பிடிக்கவும். 2. கழுத்தை இடது தோள்புறம் திருப்பி, முதுகினைத் திருப்பவும், நிமிர்ந்து இருக்கவும், அதேபோல் மறுகால் மாற்றி மாற்றிச் செய்யவும். 12. பர்வத்தாசனம் பர்வதம் என்றால் மலை என்று பொருள். மலை உச்சிபோல இந்த ஆசனம் தோற்றம் அளிப்பதால் இதற்கு பர்வத்தாசனம் என்று பெயர் வந்தது. கோபுர ஆசனம் என்றும் இதைக் கூறுவார்கள். செயல் முறை: 1. பத்மாசன இருக்கையில் முதலில் அமரவும். 2.இரு கைகளையும் கூப்பிய நிலையில் தலைக்கு மேலாக வைக்கவும். 3.அப்படியே முன்புறம் குனிந்து முழங்கை வரை தரையில் வரும்படி வைக்கவும். கால்கள் தரையில் இருக்கவும். 4. பிறகு ஆரம்ப நிலைக்கு வரவும். பயன்கள் : பத்மாசனத்தில் கிடைக்கும் அத்தனை பயன்களும் இதில் கிடைக்கும்.