பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 71 - __ - _ s = = = = سے -------------- اجے بہ 2. மல்லாந்து படுத்துக் கொண்டு செய்யும் ஆசனங்கள் N - - - - - - - - - - - - வகை ை--சி 13. சவாசனம் பெயர் விளக்கம்: சவம் என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு பிணம் என்பது பொருளாகும். ஆகவே, இந்த ஆசனத் தை ஒ ரு சி லா பிண ஆசனம் என்றும் கூறு கின்றார்கள். இந்த ஆசனத்தை செய்யும்பொழுது, ஒருவருடைய உடல் பிணம் போன்ற நிலையில் கிடப்பதால், இதனை அவ்வாறு கூறுகின்றனர். இதனை கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருப்பதால், எல்லா ஆசனங்களையும் செய்த பிறகு, உறுப்புக்களைத் தளரவிட்டு, முழுஒய்வு பெறுவதற்காக அவயவங்களைக் கிடத்தி அசைக்காமல் இருப்பதால், இதனை ஓய்வாசனம் என்று நாம் கூறுவோம். செயல்முறை: விரித்திருக்கும் விரிப்பின்மீது மல்லாந்து படுக்கவும், உள்ளங்கைகள் மேற்புறம் பார்த்திருப்பதுபோல கைகளிரண்டையும் உடல் பக்கவாட்டில் வைத்து, கால்களை விறைப்பாக நீட்டி இருக்கவேண்டும். குதிகால்களை சேர்த்து வைத்திருக்கலாம். ஆனால் தொட்டுக் கொண்டிருக்கக் கூடாது. முன் பாதங்களை சற்று விரித்தாற் போலவும் வைத்திருக்கவேண்டும்.