பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 75 15. மத்சியாசனம் பெயர் விளக்கம்: மத்சி எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு மீன் என்பது பொருளாகும். ஆசன அமைப்பு அவ்வாறு ஒரு தோற்றத்தை அளிக்கிறது. இந்த ஆசனப் பயிற்சியின் வழியாகப் பெறுகின்ற பிளாவினி பிராணாயாமம் என்னும் ஒருவித யோக சுவாசித்தலின் மூலமாக, ஒரு யோகாசனப் பயிற்சியாளர், நீந்தாமலேயே தண்ணிரில் நீண்டநேரம் மீன்போல மிதக்கலாம் என்கிறார்கள் ஆசன வல்லுநர்கள். - நாம், நமது உடல்நலத்திற்காக இந்த ஆசனத்தைச் செய்யலாம். செயல்முறை:இ. விரித்த சமுக்;ே . காளத் தி ல |க ப த மா ச ன இருக்கையில் முதலில் உட்கார வேண்டும். பத்மாசன இருக்கையில் இருந்தபிறகு, அப்படியே பின்புறமாக சாய்ந்து படுக்க வேண்டும். படுக்கும்போது பத்மாசன அமைப்பு சிறிதும் கலையக்கூடாது. கால்களும் விலகக்கூடாது. (படம் காண்க). பத்மாசன அமைப்புள்ள கால்கள் தரையினைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். பின்னால் சாயும்போது, திடுமென சாய்ந்து படுக்கக் கூடாது. அதாவது, முழங்கைகள் அல்லது கைகளை பின்புறம் தரைப்பகுதியில் வைத்துச் சாய்ந்தபிறகு, முதுகுப்பகுதியில்