பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா செயல் முறை: விரிப்பின் மீது முதலில் மல்லாந்து படுக்கவும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில், உள்ளங்கைகள் தரைப் பகுதியைப் பார்த்திருப்பது போல னைத்து, தொடைக்குப் பக்கத்தில் வைக்க வேண்டும். பிறகு, கால்களை மடக்காமல், மெதுவாக, உயரமாக உயர்த்தவும். கைகளை தரையைவிட்டு எடுக்காமல், இடுப்பை மட்டுமே உய பின்புறமாகக் கொண்டு போகவும். மேலே உயர்த்திய க. :ள, தலைக்குப் பின்புறம் உள்ள தரையைத் தொடுவதற்க க் கொண்டு செல்லவும், முழங்கால்கள் விறைப்பாக இருகக வேண்டும். கால்கள், தொடைப் பகுதிகள் எல்லாம் ஒரே நேர்க் கோட்டில் இருப்பதுபோல இருக்கவேண்டும். மோவாயை (Chin) மார்பின்மீது வைத்து அழுத்தவும். மூக்கின் வழியே மெதுவாக மூச்சு விடவும். (படம் பார்க்கவும்) ஓரிரு நிமிடங்கள் இருந்து, மீண்டும் பழைய நிலைக்கு வரவும். எண்ணிக்கை 1. மல்லாந்து படுத்திருந்து, கால்களை உயர்த்திப் பின்புறமாகக் கொண்டு வந்து தரையைத் தொடவும். 2. மல்லாந்து படுத்திருந்த நிலைக்கு வரவும். பயன்கள்: முதுகுப்புறமுள்ள எல்லா எலும்புகளும் நன்கு வளைந்து நெகிழும் தன்மையைப் பெறுகின்றன. வலிமையான அடிவயிற்றுத் தசைகள், நிமிர்ந்த முதுகுத் தண்டு, கழுத்துத் தசைகள் எல்லாம் வளமான தைராய்டு சுரப்பிகளைப் பாதுகாத்துப் பணியாற்றச் செய்கின்றன. இதயத்தை வலிமையாக்கி, இரத்த ஓட்டத்தை விரைவு படுத்துகிறது. மலச்சிக்கல் தீர்கிறது சுறு சுறுப்பும் சக்தியும் நிறைந்த தேகத்தை தருகிறது.