பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 79 3. குப்புறப்படுத்துக்கொண்டு செய்யும் ஆசனங்கள் 17. புஜங்காசனம் பெயர் விளக்கம்: புஜங் எனும் சமஸ்கிருதச் சொல்லுக்குத் தமிழில் நல்ல பாம்பு என்பது பொருளாகும். இந்த ஆசனத்தை செய்து முடித்த நிலையில் ஒருவரைப் பார்க்கும்பொழுது, அவரது உயர்த்திய இடுப்பு கழுத்து, தலை இவற்றைக் கூர்ந்து கவனித்தால், செதில்களின் ஆதாரத்தில் தலையைத் தூக்கிப்படம் விரித்திருக்கின்ற பாம்பினைப் போல தோற்றம் தரும் என்பதால், இதற்குப் புஜங்காசனம் என்று பெயரிட்டிருக்கின்றனர். o செயல்முறை: விரிப்பின்மீது முதலில் குப் புறப் படுக்க வேண் டும் . | / . வி ர ல க ளி Z/NJமு ன புற மி الے ேந ா க’ கி - இருப்பதுபோல உள்ளங்கைகளைத் தோளுக்குக் கீழே முழங்கைகளை மடித்து வைத்திருக்க வேண்டும்.