பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 81 - போக்கி இதமளிக்கிறது. வயிற்றுத் தசைகள் இறுக்கப்பட்டு மலச்சிக்கல் ஜீரண சக்தி அதிகமாகிறது. அட்ரீனல், தைராய்டு சுரப்பிகளை நல்ல பணியாற்றத் தூண்டுகிறது. 18. தனுராசனம் பெயர் விளக்கம்:தனுர் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில், வில் என்று பொருள். இதை வில்லாசனம். என்றும் கூறலாம். இந்த சனத்தை செயி பொழுது உடலும் தொடைப் பகுதிகளும் வளைந்த வில்லின் மேற்புறம் போலவும், நீட்டி யிருக்கின்றகைகளும் கால்களும் வில்லை வளைத்து இழுக் * கின்ற நாண் (கயிறு) போலவும் தோன்றுகிறது. (படம் பார்க்கவும்) என்பதால்தான் இந்தப் பெயர் பெற்றிருக்கிறது. செயல் முறை: தசைகளை தளர்த்திய நிலையில், விரிப்பின் மீது குப்புறப் படுத்திருக்க வேண்டும். கைகளிரண்டையும் உடலுக்குப் பக்கவாட்டில் வைத்து கால்கள் இணைந்திருப்பது போல படுத்திருக்கவும். பிறகு, கால்களைப் பின்புறமாக வளைத்து, ஒவ்வொரு கணுக்காலையும் ஒவ்வொரு கையால் பற்றிப் பிடித்துக் கொண்டு, குதிகால் பின்புறம் நோக்கி வருவது போல் கொண்டு வர வேண்டும். - இப்பொழுது, மூச்சை நன்றாக இழுத்துக் கொள்ள வேண்டும்.