பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கணுக்காலை வலிந்து இழுக்க வேண்டும். இழுக்கும் போது தொடைப்பகுதிகள் தரையை விட்டு மேலே கிளம்பி விடும். மார்புப் பகுதியும் மேல் நோக்கி வந்திருக்கும். இப்பொழுது உடல் எடை முழுவதும் வயிற்றிலேதான் இருக்கும். அதாவது வயிறுதான் தரையோடு இருக்கும். இந்த அமைப்பைப் பார்த்தால் வளைந்த வில் போல இருக்க வேண்டும். எண்ணிக்கை 1. குப்புறப் படுத்திருந்து விட்டு, கால்களை வளைத்து கைகளால் கணுக்கால்களைப் பற்றிப் பிடிக்க வேண்டும். - 2. கணுக்கால்களை இழுத்து, தலைப் பகுதியும் கால் பகுதியும் மேல் நோக்கி எழும்புவதுபோல இழுக்க வேண்டும். == 3. முதல் எண்ணிக்கை போல கொண்டு வர வேண்டும். 4. குப்புறப் படுத்துக் கொள்ள வரவேண்டும். பயன்கள்: இது புஜங்காசனமும், சலபாசனமும் சேர்ந்த ஒரு ஆசன முறையாகும். அந்த இரண்டு ஆசனங்களில் கிடைக்கும் அத்தனைப் பயன்களும் இதில் கிடைக்கும். பின்புறத் தசைகள் பிடித்துவிடப்பட்டு, இதம் பெறும். மலச்சிக்கல் தீர்ந்து போகின்றது. பசி மந்தம் போய்விடுகிறது. முழங்கால் வலி தீர்கிறது. கொழுப்புச் சத்தைக் குறைக்கிறது, பசியை மிகுதிப்படுத்துகிறது. 19. சலபாசனம் பெயர் விளக்கம்: சலபா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு, வெட்டுக்கிளி என்பது பொருளாகும். இந்த ஆசனத்தைச் செய்யும்பொழுது பார்த்தால், ஒரு வெட்டுக் கிளியானது, தனது வாலை உயர்த்திக்