பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா நிலையில், உடல் எடையானது, தரையோடு தரையாக இருக்கின்ற மார்பு கைகள் இவற்றின் மீதுதான் விழும் என்பதை பயிற்சியாளர் உணரலாம். தொடைப் பகுதிகள், கால்கள், முன்பாதங்கள் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதுபோல நீட்டியிருக்க வேண்டும். 20 வினாடிகள் வரை இந்த இருக்கையில் இருக்கலாம் கால்களை கீழே இறக்கும்போது மெதுவாக இறக்கி வரவும். களைப்பு வரும் வரை இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. i இதுபோல, கால்களை பின்புறமாக அதிக உயரம் தூக்குவது முதலில் கடினமாகத் தோன்றும், தொடர்ந்த பயிற்சியால் எளிதாகச் செய்ய முடியும். எண்ணிக்கை 1. குப்புறப் படுத்தவுடன், மேலே விளக்கிய முறையில் கால்களை உயர்த்தவும். 2. குப்புறப் படுத்திருக்கும் நிலையில் இருக்கவும். பயன்கள்: ஈரல், கணையம், சிறுநீர்ப்பை போன்ற உறுப்புக்களை வலிமைப்படுத்துகிறது. வயிற்றுத் தசைகள் மேலும் வலிமை பெறுகின்றன. இடுப்பிற்குக் கீழே உள்ள பகுதிகள் இந்த இயக்கத்தினால் அதிக அளவு இரத்த ஓட்டத்தைப் பெறுகின்றன. ஆழ்ந்த சுவாசத்தினால், சுவாசத் தசைகள் அதிக சக்தியைப் பெறுகின்றன. நுரையீரல் வலிமையுறுகிறது. காற்றுப் பாதைகள் தடைகளின்றி அமைகின்றன. தூய்மை பெறும். o


---

- - - - - -


|--|-- --- ------ ---

      • * * * *, *.

- o!" ...--க் --- - -