பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இந்த ஆசனத் தைச் செய்து முடித்திருக்கும் நிலை யினைப் பார்க்கும்போது, ஒ ட ட க ம' போன்ற அமைப் புடன் தோற்ற / N மளிப்பதால்தான், இந்தப் பெயர் அமைந் திருக் கிறது போலும். செயல் முறை: முதலில், முழங்காலில் உட்காருவது போல் உட்காரவும், உட்காருகிறபொழுது, தரையில் வைத்திருக்கின்ற முழங்காலும், முன் பாதங்களும் (Toes) தான். உட்காரப் பயன்படும் இருக்கை போல (Seat) உதவுகின்றன. அதன்மேல் அமர்ந்து, பின்புறமாக வளையவும். வளையும் போதே, கைகளால், கணுக்காலில் பக்கமுள்ள குதிகால் பகுதியைப் பிடிக்கவும். (படம் காண்க). மார்பை நன்றாக விரித்து, வயிற்றுப் பகுதியை மேலாக முடிந்தவரை உயர்த்தி, தலையை பின்புறமாகத் தொங்க விடுவதுபோல் கொண்டுவரவும். இப்படி வளைந்திருப்ப தானது, வில் வளைவது போன்ற தோற்றத்தைத் தரும். இப்பொழுது, முழங்கால் பகுதியிலிருந்து தொண்டைப்பகுதி வரை நன்றாக (நீட்டி) மடக்கியிருப்பது தெரிகிறது. இவ்வாறு இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.