பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 87 பயன்கள்: முதுகெலும்பு நன்றாக வளையவும் நெகிழவும் கூடிய தன்மையை இந்த ஆசனம் அளிக்கிறது. நரம்புகளை வலிமைப்படுத்துகிறது. முதுகெலும்பினை ஒட்டிய தசைகள், திசுக்கள், நரம்புப் பகுதிகள் அனைத்திற்கும் செழுமையும் வலிமையும் நல்குகிறது. மார்புப் பகுதி நன்றாக விரியும் வண்ணம் செய்யப்படுகின்ற இந்த ஆசனத்தால், கூடாது மார்பு உள்ளவர்களுக்கு இயல்பான மார்பு அமைப்பு உண்டாகிறது. வயிற்றுத் தசைகளை வலிமையுடையதாக மாற்றுகிறது மலச்சிக்கலைப் போக்குகிறது. சிறுநீரகக் குழாய்களைத் தூய்மைப்படுத்தி, சிறந்த முறையில் செயல்படத் தூண்டுகிறது. உயரமாக வளரவும் இந்த ஆசனப் பயிற்சி உதவுகிறது. எல்லா சுரப்பிகளையும் செவ்வனே பணியாற்றத் தூண்டுகிறது. இடுப்பின் பகுதிகள் எழிலாகத் தோற்றம் அளிக்கவும் உதவுகிறது. * - எண்ணிக்கை முறை: 1. முழங்கால், முன்பாதம், தரையில் பட உட்காருதல். 2. பின்புறமாக வளைந்து, தலையை பின்புறம் கொண்டு சென்று, கைகளால் கால்களைப் பிடித்தல். 3. அந்த முறையிலே இருத்தல். 4. முதல் எண்ணிக்கைக்கு ஏற்ப வருதல்.