பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா - - - 詹 நின்றுகொண்டு செய்யும் ஆசனங்கள் --- ைேவ -l, ...) 22. மலை ஆசனம் தாடா என்றால் சமஸ்கிருதத்தில் மலை. ஆசனம் என்றால் இருக்கை, இதனால் இதற்கு மலை ஆசனம் என்று பெயர். ஒவ்வொருவரும் எப்படி நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வழிகாட்டுகிற ஆசனம். நிற்கும் நிலை: 1. கால்கள் இ! இரண்டையும் சேர்த்து வைத்து, \த் முழங்கால்களை, விறைப்பாக்கி நிமிர்ந்து நில். 2. வயிற்றை உட்புறமாக அழுத்தி கழுத்தை நேராக்கி நெஞ்சை நிமிர்த்தி நில். 3. கைகள் இரண்டும் பக்கவாட்டில், தொடைகளை தொட்டிருப்பதுபோல் வைக்கவும். பயன்கள்: எப்படி நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கி தோரணையை ஏற்படுத்தித்தருகிறது. வளைந்து தொய்ந்து நிற்கும் தோரணையால் உடலுக்குக் களைப்பும், மனதுக்கு சோர்வும் உண்டாகிறது. அதை மாறாக தோற்றம் தர உதவுகிறது.