பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா முதலில் கட்டை விரல்களைத் தொடுவதே கடினமாக இருக்கும். தொடர்ந்து பயிற்சி செய்தால், எளிதாக முடியும். இதனை 4 அல்லது 5 முறை தொடர்ந்து செய்யலாம். எண்ணிக்கை 1. கால்களை சேர்த்துவைத்து, தலைக்குமேல் கைளை உயர்த்தி நிற்கவும். 2. முழங்கால்களை மடக்காமல் குனிந்து, கட்டை விரல்களைப் பிடித்து, முகத்தை முழங்கால்கள் மீது படும்படி தொடவும். 3. முதல் எண்ணிக்கைபோல கைகளை உயர்த்தி நிற்கவும். 4. இயல்பாக நிமிர்ந்து நிற்கவும். பயன்கள்: பச்சிமோட்டாசனத்திற்குக் கிடைக்கும் அத்தனைப் பயன்களும் இதிலும் கிடைக்கும். உடல் உயரமாக வளர இது உதவுகிறது. தொந்தியைக் குறைய வைக்கிறது. கனமில்லாத உடல் பெற வைக்கிறது. தேவையில்லாத வயிற்றுத் தசைகளைப் போக்குகிறது. முதுகெலும்பின் வளையும் நெகிழ்ச்சி மிகுதிப்படுகின்றது. 24. உட்காடாசனம்1 பெயர் விளக்கம்: நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருப்பது போன்ற அமைப்புடன் இருந்து, இந்த ஆசனம் செய்யப்படுவதால், இதனை உட்காடாசனம் என்று அழைத்தனர். இதை நாற்காலி ஆசனம் என்றும் கூறுவார்கள். அதாவது, நாற்காலி ஒன்று இருப்பதாகக் கற்பனை பண்ணிக் கொண்டு, அதில் உட்கார்ந்திருப்பதுபோல வளைந்து நின்று செய்யும் அமைப்பு இது.