பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும் யோகாசனங்கள் 91 செயல்முறை: முன் பாதங்கள் இரண்டும் இணையாக இணைந்திருக்க, இடுப்பின் இருபுறமும் கைகளை ஊன்றியபடி, விறைப்பாக நிமிர்ந்து நிற்கவும். பிறகு, மெதுவாக அமர்வதுபோல, உடலைக் கீழாகத் தாழ்த்திக் கொண்டே வந்து, ஒரு நாற்காலியில் உட்காருகின்ற உயரத்திற்கு வந்தவுடன், அப்படியே நின்றுவிட வேண்டும். இடுப்பிற்கு மேல் உள்ள உடல் பகுதியை விறைப்பாக நிமிர்த்தியே இருக்க வேண்டும். இதை எவ்வாறு பயில்வது என்பதையும் காண்போம். இடுப்பில் கைகள் இருக்க, கால்களை இணைத்து வைத்து, ஒரு நாற்காலியில் ஒருவரை உட்காரவைத்து, பிறகு நாற்காலியை எடுத்துவிடவேண்டும். அதற்குப்பிறகும், அவர் நாற்காலியில் இருப்பதுபோலவே அதே நிலையில் இருக்க வேண்டும். தொடைகள் இரண்டும் தரைக்கு சமமாக (Parallel) இருப்பதுபோல வைத்திருக்க வேண்டும். இவ்வாறு நிற்கும்போது தொடைத் தசைகளை சுண்டி இழுக்கும் என்றாலும், அதைப் பொறுத்துக் கொண்டு சரியான முறையில் செய்ய வேண்டும். உடற்கலை வல்லுநர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் இந்த ஆசனப் பயிற்சியை மிக எளிமையாகவே செய்ய முடியும். எண்ணிக்கை 1. ஒன்று என்றதும், முழங்கால்களை மடக்கி விறைப்பாக உட்கார்ந்திருக்கவும். முன்னர் விளக்கியிருப்பதுபோல, இடுப்பில் கை ஊன்றியபடி, விறைப்பாக, நிமிர்ந்து நிற்கவும். 2. இயல்பாக நிமிர்ந்து நிற்கவும் (Position)