பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பயன்கள்: கெண்டைக்கால் தசை, தொடைத் தசைகள, மற்றும் இடுப்புப் பகுதிகளை வலிமையாக்குகிறது. 25. உட்காடாசனம் 2 இதுவும் நாற்காலி ஆசனமான உட்காடாசனத்தின் மற்றொரு வகையாகும். - செயல்முறை: முதலில் கால்களை இணைத்து நிற்க வேண்டும். பிறகு குதிகால் களை உயர்த்தி, முன் பாதங் களால் உயர்ந்து நிற்கும்போதே, கொஞ்சங் கொஞ்சமாக உடலைக் கீழாக இறக்கிக் கொண்டு வந்து, குதிகால் மேல் அமர்வது போல் உட்கார வேண்டும். உட்கார்ந்தவுடன் கைகளை - f f o முழங்கால்களின் மீது வைக்க -- வேண்டும். பிறகு சேர்ந் & - 4 \ Z. திருக்கும் முழங்கால்கள் ،لال لا بی ** இரண்டையும் பிரித்து பக்க வாட்டிற்குக் கொண்டு வருவது போல விரிக்க வேண்டும். அப்பொழுதும் உடல் விறைப்பாக நிமிர்ந்தே இருக்க வேண்டும். எண்ணிக்கை முறை 1. குதிகால்களை உயர்த்தி முன் பாதங்களில் நின்று அவைகளில் அமர்வதுபோல உட்கார்ந்து கைகளை முழங்கால்களின் மீது வைக்கவும்.