பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 5 வினாடி நேரம் பாதத்தைத் தொட்டவாறு இருந்து, பிறகு நிமிர்ந்து நிற்கவும். எண்ணிக்கை முறை 1 விறைப்பாக நிமிர்ந்து கால்களை விரித்து வைத்து நிற்கவும். 2. வலது பக்கமாகக் குனிந்து வலது கையால், வலது பாதத்தைத் தொடவும். 3. பிறகு, இயல்பாக நிமிர்ந்து நிற்கவும். பயன்கள்: முதுகெலும்பின் நரம்புகளையும், வயிற்றுப் பகுதிகளையும் இவ்வாசனம் வலிமைப்படுத்துகிறன. மலச்சிக்கல் நீங்குகிறது. இடுப்புச் சதைகள் கரைகின்றது. முதுகெலும்பு நெகிழும் தன்மையுடன் இதமாகப் பணியாற்றத் தூண்டப்படுகிறது. 29. சிரசாசனம் பெயர் விளக்கம்: சிரசு என்றால் தலை என்பது பொருளாகும். தலையை ஊன்றி ஒரு இருக்கையாக அமைத்துக்கொண்டு நிற்பதால், இதற்கு சிரசாசனம் என்று பெயர் வைத்தனர் யோகிகள். அதிகமான பயன்களை உடலுக்கும் மனதுக்கும் யோகத்திற்கும் ஒருசேரத் தருவதால், இதனை ஆசனங்களின் அரசன் (King of Asanas) என்று புகழ்ந்து அழைக்கின்றார்கள். செ ய ல முறை : o உடம்பின் முழு எடை யையும் தலையே தாங் கிக்கொண்டு இருப் பதால், செய்யுமிடம் கட்டாந் தரையாக