பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிர மாலை

டாக்டர் பு.மு. சாந்தமூர்த்தி, எம்.ஏ., பிஎச். டி., தமிழ்ப் பேராசிரியர் - துறைத் தலைவர் செளராஷ்டிர கல்லூரி, மதுரை-600 008.

வேங்கடவன் மலர்த்தாளில் நெஞ்சம் வைத்து வினையகற்றும் பிரபந்த விளக்கை ஏந்தி ஒங்குபுகழ்த் தமிழ்ச்சுடரின் பாதை கண்ட

உயர்வானப் பரப்பாக அறிவைத் தேக்கிப் பாங்குடனே தொண்டாற்றும் என்றன் ஆசான்

பண்பட்ட தமிழ்ச்சுப்பு ரெட்டி யார்தம் தேங்கமழும் நூலுக்குள் திளைத்து நின்றேன்

தேவநலத் தொடர்களிலே திருவைக் கண்டேன். 1

செந்தமிழில் தோய்ந்தவுளம் என்பதாலே

செம்மாந்த பாரதியை உணர்ந்த தாலே சிந்தையிலே பல்லா ற்றல் வளரக் கண்டார்

செழுந்தமிழின் நூற்பரப்பில் சிறப்புத் தந்தார்; இந்தவளம் வாய்த்திட்ட இசைமை யாலே

இவர்பெற்ற அருங்கலைக்கோன் என்னும் பட்டம் சந்ததமும் இவர் திறமை சாற்று மன்றோ?

சங்கத்துத் தமிழ்வளரும் சான்று மன்றோ? 3.

விண்ணளவு விரிந்திலங்கும் அறிவின் ஈட்டம்

விரும்பித்தாம் கொண்டதனால் தமிழ வீட்டில்

எண்ணரிய துறைகளிலே இதயம் தந்தார்

இலங்குதுறை பலவற்றில் நூல்கள் தந்தார்;