பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பரகாலன் பைந்தமிழ்

தவன் (3); யசோதை வடிவு கொண்டு வந்து தனக்கு நஞ் சூட்டிய முலையைத் தந்த பூதனையை முடித்தவன் (5): நப்பின்னையின் பொருட்டு அசுராவேசமுடைய ஏழு காளைகளை அடக்கியவன் (6): தான் கடல் கடைந்த காலத்தில் கடலினின்றும் வெளிப்பட்ட ஐராவதம், அமிர் தம் ஆகியவற்றை இந்திரனுக்கு ஈந்து தேவர்கட்குத் தலைவனாக இருக்கும் தன்மையையும் நல்கியவன் (7); இப்பெருமானே மாரீசன்மீது வரிசிலை வளைத்துக் கணை தொடுத்தவன்; இரணியனின் மார்பைக் கீண்டவன்; நான்முகக் கடவுள் சிவன்மீது சீறி அவனுக்குக் கொடுத்த வெந்திதல் சாபத்தைந் தவிர்த்தவன் (8). இத்தகைய எம்பெருமான் தொண்டர்களின் பிறவிப் பிணியைப் போக்கி வீடு பேற்றை அருளுபவன்- தொழுதெழு தொண்டர்கள் தமக்கு பிணியொழித்து அமரர் பெரு விசும்’பு அருளும் பேரருளாளன்': மனமே, அவனே உன்னுடைய உறுதிப் பொருளாகும்” (4) என்று மனத் திற்கு உபதேசம் செய்கின்றார் ஆழ்வார்.

இந்த எம்பெருமானைப்பற்றிய இத் திருப்பாசுரங் களை ஒதுபவர்கள் மண்ணுலகை நெடுநாள் ஆண்டும், பிரமபதத்தை நிர்வகித்தும் அதன் பிறகு நித்திய சூரிகளு. டன் ஒருங்கே இருப்பர் (10) என்று பலனையும் பேசித் திருமொழியை முடிக்கின்றார்.

வதரியிலிருந்து ஆழ்வஈர் சாளக்கிராமத்திற்கு வருகின் றார். ஒருதிருமொழியால் (1, 5) இத் திருத்தலத்து எம்.

7. சாளக்கிராமம். இத்திருத்தலம் நேபாளத்தில் உள்ளது. காட்டுமாண்டு என்னும் தலைநகருக்கு 60 கல் தொலைவில் மேற்குத்திசையில் உள்ளது; கண்டகி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது. இத் திருத்தலம் பெருஞ்சாலைக்கு 100 கல்