பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 5 Å

பெருமானை மங்களாசானம் செய்துள்ளார். வழக்கம் போல் பாசுரங்கள் தோறும் திருத்தலத்தின் சூழ்நிலையைக் காட்டுவதுடன் அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெரு மானைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கின்றார். ஒவ்வொரு பாசுரமும் சாளக்கிராமம் அடை நெஞ்சே!” என்று நெஞ்சை ஆற்றுப்படுத்தும் பாங்கில் அமைந் துள்ளது.

தாயாய் வந்த பேய் உயிரும்

தயிரும் விழுதும் உடனுண்ட

வாயான்; தூய வரியுருலில்

குறளாய்ச் சென்று, மாவலியை

தொலைவில் உள்ளது. குறுகிய மலையிடுக்கு களில் உள்ள ஒற்றையடிப் பாதை வழியாகத் தான் இத்திருத்தலத்தை அடைதல் வேண்டும். நெடுஞ்சாலைக்குப் பத்து கல் தொலைவுக்கு அப் பால் அங்கும் இங்குமாகப் பல சிற்றுார்கள் உள்ளன. அவ்விடங்களில் சிறுத்தைப் புலிகள் நடமாடுகின்றன. இத்தலத்திற்குப் போகிறவர் கள் நேபாள அரசிடம் இசைவு பெறுதல் வேண்டும். ஐம்பதிற்குக் குறைவான எண்ணிக் கையுள்ள திருத்தலப் பயணிகட்கு இசைவு வழங் கப் பெறமாட்டாது. பட்டாளத்தில் தெரிந்த பெரிய அலுவலர்கள் இருந்தால் அவர்கள் உத்வி யால் சற்று எளிதாகப் பயணத்தை அமைத்துக் கொள்ளலாம், எம்பெருமான்: பூரீமூர்த்தி பெரு மாள்; தாயார்: பூரீதேவிநாச்சிய்ார். எம்பெரு மான் நின்ற திருக்கோலம்; வடக்கு நோக்கிய திரு முகமண்டலம். பெரி. திரு 1.5 (ப்திகம்). மேலும் செய்திகளை வேண்டுவோர் இவ்வாசிரியரின் 'வடங்ாட்டுத் திருப்பதிகள்’ என்ற நூலில் 5-வது கட்டுரையைக் காண்க.