பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 53

உலவு திரையும் குலவரையும்

ஊழி முதலா எண்திக்கும் நிலவும் சுடரும் இருளுமாய்

நின்றான்; வென்றி விறலாழி வலவன்; வானோர்தம் பெருமான்

மருவா அரக்கர்க் கெஞ்ஞான்றும் சலவன் (3).

(திரை-அலைகள் (கடல்); வரை-மலை; ஊழி. காலம்; சுடர்-சூரியன், சந்திரன், ஆழி-சக்கரம்; வலவன்-வலத்திருக் ைக யி ல் உ 'ைட் ய வ ன் : வானோர்தம் பெருமான்-தேவாதி தேவன்; சல. வன்-எப்போதும் நன்மை செய்யாதவன்;

என்கின்றார் ஆழ்வார். உலவுகின்ற அலைகளையுடைய கடலும், காலம் முதலான சகல தத்துவங்களும் எட்டுத் திசைகளும், சூரிய சந்திரர்களும் இருளுமாகிய இப் பொருள்கட்கெல்லாம் அந்தர்யாமியாய் இருப்பவன்; வெற்றியையும் மிடுக்கையும் உடைய திருவாழியை வலக்கையிலே கொண்டவன்; தன்னை வழி படாத அரக் கர்கட்கு நன்மை செய்யாதவன்’ என்பது இதன் கருத்து.

மேலும், இவனை,

இருசுடராய்

வானாய் தீயாய் மாருதமாய்

மலையாய் அலைநீர் உலகனைத்தும்

தானாய் தானும் ஆனான் (7)

(இருசுடர்-சூரிய சந்திரர்கள்; வான்-ஆகாயம்;

மாருதம்-காற்று; அலைநீர்-கடல் நீர் 1

என்றும் காட்டுவர். சத்திர சூரியர்களாயும், ஆகாய மாயும், தீயாயும், காற்றாயும், மலைகளாயும், கடல்