பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5裂 பரகாலன் பைந்தமிழ்

சூழ்ந்த எல்லா உலகங்களாயும் இருப்பவன் இவன்தான் என்கின்றார். அந்தர்யாமியாக இருக்கும் இறைவனின் இருப்பைக் காட்டிய ஆழ்வார் அவதார தத்துவத்தையும் காட்டுவர்.

மான்களும் யானைகளும் குதிரைகளும் திரியும் காடும் கடந்து, வில்லையும் அம்பையும் துணையாகக் கொண்டு, சேது.கட்டி மதில் நீர் இலங்கை வாளரக்கர் தலைவனின் பத்துத் தலைகளையும் அறுத்தெறிந்தவனும் (1); மதநீரையுடையனவாய் மலைகள் வடிவெடுத்து நடந்தாற் போன்றுள்ள யானைத் திரள்களும், குதிரைக் கூட்டங்களும் முழக்கம் செய்யும் பெரிய தேர்களும், காலாட்களும் ஒன்றாகத் திரண்டு பெரிய கிளர்ச்சியுடள் தோற்றிய இலங்கையைச் சுடுகாடாக்கியவனும் (2) இவனே. சூர்ப்பனகையின் மூக்கையறுத்து அவளைப் பிலம்போன்ற வாயைத் திறந்துகொண்டு கதறச் செய் தவனும் (3) இவனே. தாயாய் வந்த பேயாம் பூதனையின் உயிரையும், தயிரையும் வெண்ணெயையும் ஒன்று சேர்த்து அமுத செய்தவனும், அழகொழுகும் வாமன உருவத்துடன் சென்று, மன்னா, இன்றே மூவடி மண் தா" என்று இரந்து எல்லா உலகங்களையும் தானாக அளந்து கொண்டவனும் (8); நரசிம்ம அவதாரம் செய்து இரணி யனுடன் கடும் போரிட்டு, அவன்தன் நெஞ்சைப் பிளந்து உயிர் குடித்தவனும் (7) எந்தாய் சாபம் தீர்’ என வேண் டிய சிவனின் சாபத்தைத் தன் திருமார்பில் இலங்கும் அமிர்த நீரைக் கொண்டு தீர்த்தவனும் (8) இந்த எம் பெருமானேயாவான்.

இங்ங்ணம் இராமனாயும், கிருட்டிணனாயும், திரிவிக் கிரமனாயும், ஆள்-அரியாயும் (நரசிம்மனாயும்) எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாயும் உள்ள எம்பெரு மானே அர்ச்சை வடிவாய் சாளக்கிராமத்தில் எழுந்தருளி யுள்ளான். இந்த எம்பெருமானை அடியார் கூட்டமும்,