பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பரகாலன் பைந்தமிழ்

வந்திருக்க வேண்டும், இங்கு ஆழ்வார் மங்களாசாசனம் செய்ததாகப் பாசுரங்கள் இல்லை. ஆனால் பிற இடங் களில் மங்களாசாசனம் செய்யும்போது இந்தத் திருத் தலத்தைப்பற்றிச் சிந்திக்கின்றார். திருவேங்கடத்தை மங்களாசாசனம் செய்யும்போது,

கோத்தங்கு ஆயர்தம் பாடி யில்குர

வைப்பி ணைந்தஎம் கோவலன் (1.8:5)

என்றும்,

நாண்மலராள் நாயகனாய் நாமறிய

ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி (5.5:5)

என்றும், திருப்பேர் நகரை மங்களாசாசனம் செய்யும் போது ஏழுகாளைகளை அடக்கிப் பின்னைப் பிராட்டியை மணந்த செய்தியைக் குறிப்பிடும் பாங்கில்,

அம்பொன் ஆர் உலகம் ஏழும்.

அறிய ஆய்ப் பாடி தன்னுள்

கொம்பனார் பின்னை கோலம்

கூடுதற்கு ஏறு கொன்றான் (5.9:8)

என்றும் எம்பெருமானது எளிைைமயையும் உயர்வையும் இரண்டு ஆய்ச்சிகள் எதிரெதிராகக் கூறும் பாங்கில் அமைந்துள்ள பாசுரம் ஒன்றில்,

தந்தைதளை கழலத்

தோன்றிப்போய் ஆய்ப்பாடி நந்தன் குலமதலை

யாய்வளர்ந்தான் காண்ேடி, நந்தன் குலமதலை

யாய்வளர்ந்தான நான்முகற்குத் தந்தைகாண் எந்தை

பெருமான் காண் சாழலே (11.5:2)