பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 59

என்றும், இதே திருமொழியின் இன்னொரு பாசுரத்தில்,

அறியாதார்க்(கு) ஆனாயன் ஆகிப்போய் ஆய்ப்பாடி உறியார் நறுவெண்ணெய்

உண்டுகந்தான் கானேடி உறியார் நறுவெண்ணெய்

உண்டுகந்த பொன் வயிற்றுக்கு எறிநீர் உலகனைத்தும்

எய்தாதாள் சாழலே (11.5:4)

என்றும் கண்ணன் இங்கு வளர்ந்த கால நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டிருத்தல் காணலாம் :

பிருந்தாவனம்: நெடுஞ்சிக் காடாகக் கிடந்த இடம். கண்ணன் அவதரித்ததும் இந்த இடம் அந்நிலை மாறி ‘விரஜபூமி (மேய்ச்சல் நிலம்) யாக மாறிவிட்டது. வட மதுரையிலிருந்து பிருந்தாவனம் சுமார் பத்துக் கிலோ மிட்டர் தொலைவிலுள்ளது. பிருந்தாவனம் கண்ணன் குழலூதி கோபியருடன் இராசகிரீடை (குரவைக் கூத்து) நிகழ்த்திய இடமாகும். இங்குக் காளியன் மடு, கோபி யரின் துகிலுரிந்த கட்டம், கோ பி ய ரி ன் பக்திப் பரவசத்தைக் கண்ட அக்ரூரர் கண்ணிர் மல்க விழுந்து விழுந்து புரண்ட இடம், குழலூதிக் கோபியரின் உள்ளத்தைக் கவர்ந்த வனம் (பான்சிவனம்) மற்றும் சேவாகுஞ்சம், பக்தவிலோசனம் முதலியன உள்ளன. சில நாட்களில் நளளிரவி ல் இன்றும் கண்ணனின் குழலோசை யைக் கேட்பதாக அங்குள்ளோர் கூறுகின்றனர்'

17. நூற்றெட்டு திருப்பதிகளுள் ஒன்றாகச் சேர ல்லை. வடமதுரையில் அடக்கிக் கொண்டார் போலும், 18. 1974 - திசம்பரில் கு ரு ட் சே த் தி ர த் தி ல் அரியானா) நடைபெற்ற அனைத்திந்திய கீழ்த்