பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viií

கண்ணுக்குள் கனிவுகளைத் தேக்கிக் கொண்டு

கல்விதரும் தமிழ்ச்செம்மல் ஆன ஆசான்

பண்பட்ட நெஞ்சாழம் பார்க்க வேண்டின்

பரகாலன் பாட்டாய்வே போது மென்பேன்! 3

சடகோபன் பொன்னடிஎன் றான ஆசான்

சாற்றுதமிழ்ச் சுப்புரெட்டி யார்தாம் கண்ணில் தடமாடும் களஞ்சியமாய்த் தோற்றம் தந்தார்

நம்மாழ்வார் பாசுரத்தின் நயத்தைப் போல; வடநாடும் தென்னாடும் கண்ட மாலின்

வளமான தலமெல்லாம் படைத்த தாலே படமாடும் பாம்பனையில் பள்ளி கொண்ட

பரமனவன் திருவருளே வாழ்க்கை என்பார்! :

நெற்றியிலே இறைச்சின்னம் நெஞ்சம் காட்டும்

நிமிர்ந்தநடைப் பெருமிதமோ நினைப்பைக்

காட்டும்; கற்றதுறை அறிவெல்லாம் ஆற்றல் காட்டும்

களங்கமிலாக் குழந்தைமணம் இதயம் காட்டும் ; பொற்புடைய பணியென்றும் பொலிவைக் காட்டும் புகழ்படைத்த படைப்புகளோ திறனைக் காட்டும் தற்புலமை பேராண்மை தமிழே காட்டும்

நல்லிதயப் பண்பாட்டை வாழ்க்கை காட்டும்! இ

கண்டிருக்கும் வழிகாட்டி ஆசான் நெஞ்ச க்

கனிவுகளை இவர்போலக் கொண்டா ரில்லை : பண்டிருக்கும் நூல்களையும் ஆய்வு செய்வார்

பயன்கூட்டும் அறிவியலும் தேர்ந்து சொல்வார்! மண்டிருக்கும் கலைச்செல்வம் யாவும் இந்த

மாநிலத்தின் பயனுக்கே என்பதாலே கொண்டிருக்கும் அருங்கலைக்கோன் பட்டம் உண்மை கூறுகின்ற கல்வெட்டாய் என்றும் வாழும்! இ.