பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6? பரகாலன் பைந்தமிழ்

அமைந்த பாசுரத்தில் அயோத்தி காவலன் தன் சிறுவனை' நினைந்து போற்றுகின்றார் ஆழ்வார்’

9. நமிசாரணியம்: இங்கு எம்பெருமான் ஆரணிய வடிவத்தில் சேவை சாதிக்கின் என்று பெரியோர் பணிப் பர். ஒரு காலத்தில் முனிவர்கள் நான்முகனை நோக்கித் தவம் செய்வதற்குச் சரியான, இடம் இப்பூவுலககில் யாங் குளது? என்று தங்கட்குக் காட்டுமாறு வேண்டினர். அந் நான்முகனும் ஒரு தருப்பைப் புல்லைச் சக்கரம்போல் செய்து மண்ணுலகில் உருண்டோடச் செய்து அது சென்ற இடமே சிறந்தது என்று காட்டினதாகப் புராண வரலாறு. ஆகவே நைமிசம்’ எனப் பெயர் பெற்றது. நைமிசம்நேமி விழுந்த இடம். நேமி-சக்கரம், ஆரணியம்-காடு. எனவே நைமிசாணியம்’ என்ற திரு நாமம் பெற்றது.

22. பெரி. திரு. 10, 3: 8 பெரி. திரு: 10. 3: 8 மேலும் விவரம் வேண்டுவோர் இந்த ஆசிரியரின் 'வடநாட்டுத் திருப்பதிகள்' என்னும் நூல் 3-வது கட்டுரை காண்க.

23. நைமிசாரணியம்: இத் திவ்வியதேசம் கிழக் கிந்திய இருப்பூர்திப் பாதையில்- பலமு-சீதா பூர் கின்ளபாதையில்-உள்ளது நில்ையத்திலி ருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலுள் ளது. ஊருக்கு மாட்டு வண்டியில் தான் செல்ல வேண்டும்.எம்பெருமான்: தேவராசன், பூரீஹரி; தாயார்: இலக்குமி, புண்டரீக வல்லி. அகோ பிலமடத்துச்சீயர் இங்கு எழுந்தருளிளபோது திருநாடு அலங்கரித்து விட்டார். அவருடைய சமாதி இங்கு உள்ளது. அகோபில மடத்துக் கிளை யொன்றும் இங்கு உள்ளது. ப்ெரி. திரு. 1.6 (பதிகம்). மேலும் விவரம் வேண்டு வோர் இந்த ஆசிரியூரின் வடநாட்டுத் திருப்பதி கள்’ என்னும் நூலில் 4-வது கட்டுரை கர்ண்க்.