பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 63

அயோத்தியிலிருந்து இத்திருத்தலத்திற்கு வந்த திருமங் கையாழ்வார் ஒரு திருமொழியால் (பெரி. திரு. 1.6) மங்களாசாசனம் செய்துள்ளார். பெரிய பிராட்டியாரின் முன்னிலையாகச் சரணம் புகுகின்றார் ஆழ்வார். தேனு டைக் கமலத் திருவினுக்கரசே! திருவடி அடைந்தேன். (9) என்று பிராட்டியாரை முன்னிட்டுப் பிரபத்தி பண்ணு வதைக் காணலாம். இத்திருமொழியில் எம்பெருமானு டைய மேன்மைகளையும் தம்முடைய தாழ்வுகளையும் வெளியிட்டுக் கொள்ளுகின்றார் ஆழ்வார். எம்பெருமா னிடம் அடைக்கலம் புகும் போது இங்ங்ணம் செய்ய வேண் டும் என்பது சாத்திர விதி.ஆர்த்தியின் கனத்தாலே தம் முடைய குற்றங்களையெல்லாம் விரிவாகப் பேசிக் கொண்டு சரணாகதி பண்ணுகின்றார்.

ஒருவர் செய்ய வேண்டிய வினைகள் என்று விதிக்கப் பெற்றுள்ள நல்வினைகளைச் செய்யாதொழிதலும், செய்யலாகாதென்று விலக்கப் பெற்றுள்ள தீவினைகளைச் செய்தலும் ஆகிய இருவகைக் குற்றங்கள் சாத்திரங்களில் கூறப பெற்றுள்ளன. இந்த இருவகைக் குற்றங்களும் தம்மிடம் நிறைந்திருப்பனவாகச் சொல்லிக் கொள்ளு கின்றார் ஆழ்வார்.

வாள் நிலா முறுவல் சிறுதுதல் பெருந்தோள்

மாதரார் வனமுலைப் பயனே. பேணினேன்; அதனைப் பிழை எனக் கருதி

பேதையேன் பிறவிநோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன்: எண்ணினேன் எண்ணி

இளையவர் கலவியின் திறத்தை நாணினேன் (1)

(வால்நிலா-ஒளி பொருந்திய, நுதல்-நெற்றி: வன-அழகிய்; பேணினேன்-ஆதரித்திருந்தேன்; ஏண் இலேன்-எண்ணாதவனாக நாணினேன். வெட்கித் துறந்தேன்;