பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பரகாலன் பைந்தமிழ்

என்று சிந்திக்கத் தொடங்குகின்றார். 'மாதர்களுடைய முறுவல் அழகையும், தோள் அழகையும், முலை அழகை யும், வாய் வெருவிக்கொண்டு நெடுநாள் வரையில் சபல னாய்த் திரிந்தேன். இந்நிலையில் சம்சார நோயைத் தீர்த்துக் கொள்வதற்கு வழிதேடாமல் இருந்து விட் டேனே' என்கின்றார். இந்தமுறையில் அவர் சிந்தனை செல்லுகின்றது.

மேலும், சிலம்பணிந்து செம்பஞ்சுச் சாறு பூசிய மாதர்களின் கால் அழகிலும், மைதீட்டிய கண்ணழகிலும் தோற்று, அறத்தையே மறந்தேன்; பாவங்களைச் செய்து பணத்தைத் திரட்டிப் புலன்கள் புசித்துக் களிக்கும்படி யான தீய செயல்களை அநுபவித்துப் பழுதே பல பகலும் போக்கினேன் (2); முதலில் சூதாட்டம் ஆடத் தொடங் கினேன்; பகல்காலம் முழுவதும் அதில் கழியும். ஏராள மான பொருள்கள் கிடைக்கும். பெருஞ்செல்வனாதலால் இப்படிப் பொருள்களை இழக்கின்றான் என்று எண்ணி னேன். குறுக்கு வழியில் பொருள் திரட்டி விடலாம் என்று திட்டம் போட்டு அவன் வீட்டில் புகுந்து கொள்ளையடித்தேன்; அப்பொருளைச் செலவிட வேண்டி சுரிகுழல் மடந்தையர் திறத்துக் காதலே மிகுந்து கண்ட வாறு திரிந்தேன்; மனம் போனவாறு எல்லாம் பொருள் திரட்டத் தொடங்கினேன் (3); மனைவியைத் துறந்து பிறர்பொருள் தாரத்தை நாடித் திரிந்தேன் (4); ஒரு கவ ளச் சோற்றுக்கு இரங்கிக் கேட்டவர்கட்கு இல்லையே என்று சொன்ன நீசனானேன்: (5); நான் உயிர்க்கொலை புரிந்ததற்கும் ஒர் எல்லை இல்லை (6), நெஞ்சினால் நினைந்தும், வாயினால் மொழிந்தும், நீதி இல்லாதன செய்தும் அர்ச்சிராதி மார்க்கத்தினின்றும் வழிவிலகி, து மாதி மார்க்கமே நித்தியம் என எண்ணி விட்டேன் (7). இங்ங்ணம் பல வழிகளிலும் கெட்டுழந்த ஆழ்வாருக்கு 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கும்.பேறு கிட்டத்