பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பரகாலன் பைந்தமிழ்

என்று தம் கற்பனையில் சிந்திக்கின்றார். இதற்கு இன் சுவை மிக்க பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் சுவைக்கத்தக்கது: ,அவர் தாங்கள் (யமபடர்கள்) ஒரு கைக்கு ஆயிரம் பேராக வந்து பற்றுவார்களாய்த்து; பின் இவனுடம் புதன்னோடே எற்றுவார்கள்; அநந்தரம் (பிறகு) தங்கள் கைசலித்தவாறே பொகட்டிட்டு வைப்பர். இவர் இத்தனைபோது ஸ்த்ர்களை யொழிய இருக்க வல்லரோ அவனை அழைப்பியும் என்பர்கள். இவனும், ‘நம்மை நலிவதெல்லாம் நலிந்தார்களாகிலும் இனி அவர் களை அழைக்கிறார்களிறே" என்று குறுவிழிகொண்டு கிடக்கும். எரியெழா நிற்பதாய் செம்பாலே செய்யப் பெற்ற பாவையைப் பாவீ, தழுவு என்பார்களாய்த்து. கெடுவாய்! அவர்களொழிச்சினவன்றாகிலும் அநுதாபம் பிறந்து உகந்தருளினதொரு திருவாசலிலே ததுங்கினா யாகில் இன்று எங்களுக்குக் கைசலியா தொழியலாமே. என்பார்களாய்த்து, அவர்கள் பண்ணும் நலிவைப் பொறுக்கலாம்; குரூரமான பேச்சாய்த்துப் பொறுக்கப் போகதது.'

இங்ங்ணம் நன்ஞானம் தலையெடுக்கப் பெற்றதும் ஆ ழ் வார் ைக மிசா ர னி ய த் து எம்பெருமானிடம் அடைக்கலம் புகுகின்றார். பாசுரந்தோறும் ஒரு முறைக்கு ஒன்பது முறையாக வந்துன் திருவடி அடைந்தேன் நைமி சாரணியத்துள் எந்தாய்!” என்று முறையிடு கின்றார். நைசாரணியத்திலிருந்து துவாரகை செல்லுகின் நார் ஆழ்வார்.

10. துவாரகை வடமதுரையிலிருந்து ஆழ்வார் துவாரகைச்கு' வருகின்றார். துவரை நாதனைச் சேவிக் கின்றார். பதிகம் ஒன்றும் பாடவில்லை. ஆனால் வேறு

24 துவாரகை : இத்திருத்தலம்,குஜராத்மாநிலத்தில் உள்ளது. மேற்கிந்திய இருப்பூர்த்திப் பாதையில்