பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 7 I

அந்த மலைச் சூழ்நிலையில் நெல்லி மரங்கள் கல்லிடை களில் முளைத்து வளர்ந்து அவற்றினிடையே பருத்துப் பாறைகளையும் பிளந்து தள்ளுகின்றன (9).

இங்ங்னம் அச்சத்தை விளைவிக்கும் அடவியில் குதிரை, சிங்கம், புலி, முதலிய கொடிய விலங்குகள் இங்கு மங்கும் ஓடியலைந்து ஒய்ந்து நிற்கின்றன. (3). மூங்கில் புதர்களினின்றும் புலிகள் பெருவழியில் வந்து சேர்ந்து யானைகள் நடமாடின அடையாளங்களைக் கூர்ந்து ஆராய்கின்றன (2). அவை உலாவின இடங்களைத் தேடித் திரிகின்றன. மற்றும் இங்கு நடுப்பகலில் பகலவன் காலும் வெப்பம் தாங்கமாட்டாது நாய்களும் கழுகுகளும் அவ்விடத்தில் நடக்கும்பொழுது கால் தடுமாறித் திண் டாடுகின்றன (4).

எம்பெருமானின் சந்நிதான மகிமையினால் அவ் விடத்து மிருகங்களும் பகவத் பக்தியில் திளைக்கின்றன. சிங்கங்கள் களிறுகளைக்கொன்று அவற்றின் கோடுகளைப் பிடுங்கிக்கொண்டு வந்து எம்பெருமான் திருவடிகளில் வைத்து வணங்குகின்றன (1) இவற்றுக்கு ஆனைகளின் மேலே சீற்றம் மாறாதே இருக்கச் செய்தேயும், பகவத் பக்தி ஒரு படிப் பட்டுச் செல்லுமாயிற்றே; சீற்றம் விக்ரு தியாய் (தோன்றியது) பகவத் பக்தி ப்ரகிருதியாய் (மூல காரணமாய்) இருக்குமாயிற்று” என்ற வியாக்கியானப் படுத்தி அநுபவித்து மகிழத் தக்கது. எம்பெருமானுடைய வரலாறு எதுவாயிருந்தாலும் அஃது ஆழ்வார்களுடைய நெஞ்சைக் கவர்வதுபோல் அப்பெருமான் உகந்தருளின நிலங்களில் உள்ளவை எதுவாயினும் அவ்விடத்தவை' என்ற காரணத்தினால் எல்லாம் இந்த ஆழ்வாருக்கு இன்பந் தருவனவாகும். பிறர்க்குக் குற்றமாய்த் தோன்று பவையும் உபாதேயமாய்த் தோற்றுகையிறே. ஒரு