பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பரகாலன் பைந்தமிழ்

விஷயத்தை உகக்கையாகிறது' என்ற வியாக்கியானப் பகுதி சிந்திக்கத் தக்கது.

இந்தச் சூழ்நிலையில் மக்களின் நடமாட்டத்தையும் பற்றிப் பேசுகின்றார் ஆழ்வார்

மலைத்த செல்சாத் தெறிந்த பூசல்

வன்துடி வாய்கடுப்ப

சிலைக்கை வேடர் தெழிப்ப மாத

சிங்கவேழ் குன்றமே (2)

(மலைத்த-ஆக்கிரமிக்கப் பெற்ற, சாத்து-திருத் தலப் பயணிகளின் கூட்டம்: பூசல்-போர்; பேரொலி; துடி-பறை, வாய்கடுப்ப-ஒலிக்க; தெழிப்பு-ஆரவாரம்)

என்பது ஆழ்வாரின் திருவாக்கு. இத்தலப் பயணமாகப்

பலர் அந்த அடவியில் செல்லுகின்றனர். அவ்விடத்து

வேடர்கள் அவர்களைத் தகைந்து போரிடுவர். ஒருவரோ

டொருவர் பெரும்போர் நடத்துவர். அப்போரில் வேடர்

களின் வில்லோசையும், பறையோசையும் இடைவிடாது இருந்து கொண்டே இருக்கும். இப்பொழுது இம்மலை

யில் வாழும் வேடர்கள் செஞ்சு என்ற பெயரால் வழங் கப் பெறுகின்றனர். இவர்கள் மரபில் பிறந்த மங்கை யொருத்தியை எம்பெருமான் உகந்து மணந்து கொண்ட

தாகத் தல வரலாறு கூறுகின்றது. இதனால் இப்பகுதி மகளிருக்குச் செஞ்சுலெட்சுமி" என்று பெயரிடும் வழக்க மும் இருந்து வருகின்றது.

பாசுரங்கள் தோறும் நரசிம்மாவதாரப் பெருமையில் ஆழ்வார் ஆழங்கால் படுவதைக் காண்போம். இந்தச்

27. Gjih. திரு. 1.7:3 இன் உரை.