பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 75

மாலோல நரசிம்மர் (8), இவரை ஆராதனை தெய்வமாகக் கொண்டு தான் பிற்காலத்தில் அகோபில மடம் நிறுவப் பெற்றதாக வரலாறு. மலையடிவாரத்திலிருந்து சற்றுத் தொலைவில் அட்சய தீர்த்தத்திற்கு அருகில் எழுந்தருளி யிருப்பவர் பார்க்கவ நரசிம்மர் (9). வடக்கு நோக்கிய திரு முக மண்டலத்தர். அட்சய தீர்த்தத்தில் என்றும் நீர் அமுத தாரையாய் வற்றாது இருக்கும். திருத்தலப் பயணி கட்கு நீர் வசதியை நல்குவது.

இத ஒன்பது நரசிம்மார்களையும் சேவித்து சென்று காண்டற்கரிய (5), தெய்வமல்லால் செல்லவொண்ணர்' (4) என்ற ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால்பட்டு அது பவிக்கலாம். அல்விமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளனை’ (9) சேவித்த களிப்பிபில் மூழ்கலாம் இவளணைத்ததால் (பெரிய பிராட்டியார்) இவளைக் கட்டிக் கொள்ள ஆயிரந் தோள் உண்டாமாயிற்று' என்ற பெரிய வாச்சான் பிள்ளையின் உரைநயத்திலும் ஆழங்கால் படலாம். இங் கிருந்து ஆழ்வார் திருவேங்கடம் வருகின்றார்.

12. திருவேங்கடம்: கோயில் (திருஅரங்கம்) திருமலை, பெருமாள் கோயில் (காஞ்சி) என்று வைணவப்

28. இப்போது ஆந்திரமா நிலத்தில் சித்துளர் மாவட்டத்தில் தமிழகத்தின் வடதிசையில் உள்ளது இன்று பெரும்பான்மையோர் திருப் பதி மலையைத் திருப்பதி' என்றே வழங்கு கின்றனர் விவரம் அறிந்தோர். இதனைத் 'திருமலை’ என்று கூறுகின்றனர். இம் மலை ஏழுமலை’ என்றே வழி வழியாக வழங்கப் பெறு கின்றது. இன்று பேருந்து மூலம் இறங்கும் போது இம்மலையின் பெயர்ப்பலகையைக்கான லாம். இந்த வழியில் கீழிருந்து மேலே செல் லுங்கால் எருத்து மலை (விருஷபாத்திரி) நீல மலை (நீலாத்திரி), மைவரை (அஞ்சனாத்திரி),