பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பரகாலன் பைந்தமிழ்

பெருமக்களால் போற்றப் பெறும் மூன்று திவ்விய தேசங் களுள் இது நடுநாயகமாகத் திகழ்கின்றது. ஆழ்வார் பெரு மக்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 213 பாசுரங் களில் 62 பாசுரங்கள் திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்றவை. பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் பெருமையைப் பலவாறு பேசி இனியராகுகின்றார். எம்பெருமான் பல்வேறு அவதாரங் கள் எடுத்து மக்களுக்காகச் செய்த பல்வேறு நற்செயல் களை எடுத்துக் காட்டி அகமகிழ்கின்றார். திருவேங்கட முடையான் குருந்தம் ஒசித்த கோபாலனாக வந்தவன்; கொக்கின் வடிவமாக வந்த அசுரனை வாய்பிளந்து வானுலகிற்கு அனுப்பிய வித்தகன் (பெரி. திரு. 1.8:1);

பாம்புமலை (சேஷாத்திரி), கருடமலை (கருடாத் திரி), நாராயணமலை (நாராயணாத்திரி), வேங் கடமலை (வேங்கடாத்திரி) என்ற மலைகளைக் (அத்திரி-மலை) காணலாம் இந்த மலை பற்றி மேலும் எழுதுவது நாடறிந்த பார்ப்பனன்ை" அறிமுகப் படுத்துவது போன்றது. இறைவன்; திருவேங்கட நாதன், திருவேங்கடமுடையான், சீநிவாசன், வேங்கடநாதன்,பாலாஜி, வேங்கடா சலபதி. நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்: தாயார்: அலர்மேல் மங்கைத் தாயார் (திருச்சானூரில்) 29. இந்த ஆசிரியரின் வடநாட்டுத் திருப்பதிகள்' என்ற நூலில் பத் 3இல் விவரம் காண்க. இவற் றுள் நான்கு பதிகங்கள்: ஏனையவை உதிரிப் பாசுரங்கள். இவை பிற இடங்களைப் பாடும் போது இடையில் மின் விெட்டு போல் தோன் றுபவை. விவரம் ஆ. பா: 1.8; 19: 1.10: 2.1 (பதிகங்கள்); 4.3:8; 4.7:5 5 3:4; 5.5:1; 5.6:7; 6.8:1; 7.3:5; 7.10:3; 8 2:3; 9.7:4; 9.959; 10,1:2; 10.10:5; 11.3:7; 11.5:10; திருக்குறுந்திருநெடுந்-16; சிறி-திருமடல் (39); பெரி-திரு

மடல் (6 2).