பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 77

கல்நெஞ்சத்தையுடைய பூதனையிடம் பாலமுதம் பருகிய துடன் அவள் உயிரையே குடித்து அற்புதச் செயலைப் புரிந்தவன்; கிருதயுகத்தில் வெள்ளை நிறத்தையும்,கலியுகத் தில் கறுப்புநிறத்தையும், துவாபரயுகத்தில் நீலமணி நிறத் தையும் கொண்டிருப்பவர் (2). கண்னனாக இருக்கும் பொழுது மருதிடைத் தவழ்ந்து நளகூபர மணிக்கீரீபர் களின் சாபத்தை நீக்கிய பெருமையுடையவன்; குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்து ஆநிரைகளின் துன்பத்தைப் போக்கியவன் (3). பார்த்தனுக்குச் சாரதியாக நின்று தேரோட்டிய வன்; ஆயர்பாடியில் கோபியருடன் குரவைக் கூத்தாடிய கோவலன் (4). மாணியாய்ச் சென்று மண்ணி ரந்து கொண்டவன்; இராமனாக நின்று மராமரங்கள் ஏழினையும் ஒரம்பினால் எய்து அற்புதச் செயலைப் புரிந் தவன் (5). பாலனாய் எழுலகுண்டு ஆலிலையில் துயின்ற வன்; திண்திறல் அரியாகி ஒண்திறல் அவுணன் உயிர் குடித்த திறலுடையவன் (6). பஞ்சபூதங்களின் வடிவாய் நின்று பேராயிரம் பெயர்களைக்கொண்ட பெம்மான் (7).

இன்னும் ஏழுமலையப்பன் இராவணனின் திண் ஆகம் பிளக்க அம்பு கோத்தது, இலங்கை அரக்கர்களை மடியச் செய்தது, நீரார் கடலும் நிலமும் முழுதுண்டு ஆவிளந் தளிரில் துயில் கொண்டது, உரிமேல் நறுநெய்யை அமுது செய்தது, குறளுருவாய் நின்று ஈரடிகளால் நிலமனைத் தையும் கவர்ந்தது, அரியாய்த் தோன்றி அவுணன் உடல் பிளந்தது. முதலிய செயல்களில் ஆழங்கால் பட்ட வண்ணம் (பெரி. திரு.1.10:1-5) பல வேண்டு கோள்களை விடுக்கின்றார் ஆழ்வார். ‘அடியேனுக்கு அருளாயே’ என்றும், அடியேனுக்கு அருள் புரியாயே' என்றும், குறிக்கொள் எனை நீயே" என்றும் பிரார்த்திக்கின்றார். அடுத்து, திருவேங்கடமுடையான் அவருடைய திருவுள் ளத்தில் வந்து புகுந்த பெருஞ்செயலைப் பேசி அநுபவிக் கின்றார். திருவேங்கடம் மேய என் ஆனை என் அப்பன்