பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 7g

துணிந்து, அந்த நெஞ்சைக் கொண்டாடும் போக்கில் ஒவ் வொரு பாசுரத்திலும் திருவேங்கடமுடையானுக்கு அடி மைத் தொழில் பூண்டாயே? திருவேங்கடமுடையானுக்கு அடிமைத் தொழில் பூண்டாயே! என்று ஒரு முறைக்கு என்பது முறையாகச் சொல்லி மகிழ்கின்றார். நம் நாட் டில் நெஞ்சை வேறு படுத்திச் சொல்வது கவி மரபு. நெஞ். சைத் தூது விடுவதாகவும் சொல்லும் முறை உண்டல் லவா? இத்திருமொழியால் ஆழ்வார் தமது நெஞ்சைப் புகழ்ந்து பேசும் முகத்தால் திருவேங்கடமுடையானை அநுபவித்து இனியராகின்றார். இத்துடன் வடநாட்டுத் திருத்தலப் பயணம் நிறைவுபெறுகின்றது. தொண்டை. நாடு செல்லத் திருவுள்ளம் கொன்ருகின்றார் ஆழ்வார்.