பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冷

பாச்சுவையில் திளைக்கின்ற போதில் நம்மைப்

பரவசத்தில் ஆழ்த்துகின்ற பண்பே தோன்றும்

நாச்சுவையில் நல்லவளம் கொண்ட ஆசான்

நான்பெற்ற வழிகாட்டி; என்றன் பேறே! 19

எல்லார்க்கும் வாய்க்காத இளமை நெஞ்சம்

இளநெஞ்சில் தமிழ்ப்பண்பே என்றும் தஞ்சம் நல்லார்வம் வளர்ப்பதிலே சீர்மை கொள்ளும்

நாளெல்லாம் எழுதுவதில் உள்ளம் துள்ளும்; சொல்லாண்மைப் பிரபந்தப் பாடற் காட்சி

சுவை நூல்கள் முன்கூறும் புலமைச் சாட்சி; வல்லமைகள் எல்லார்க்கும் வாய்ப்ப தில்லை

வளர்துறையின் திறமைக்கும் இவர்போ லில்லை! 13

கலியனாரின் புகழ்காட்டும் நூலைப் போலக்

கனிதமிழில் பிற ஆழ்வார் வாழ்வைக் கூறும் பொலிவுள்ள பலநூல்கள் தமிழுக் கீந்து

பொன்னாழிக் கையானின் புகழைப் பாடி வலிமைகளை நாளெல்லாம் வளர்க்க வேண்டும் வாழ்க்கைநலப் பாதையிலே இருகை நீட்டி மெலிந்தமனம் வீறுகொளும் வண்ணம் ஐயா மேன்மேலும் இறைநூல்கள் படைத்தல்

வேண்டும்! 12

இனிக்கின்ற சொல்லாலே இறையைப் பாடி

இதயத்தை நெகிழவைக்கும் ஆழ்வார் பாட்டின் தனிச்சுவையை வியாக்கியான" உரையில் கண்டோம்

தமிழறிந்தார் நெஞ்சாரச் சுவைக்கும் வண்ணம் கணிதமிழில் அவ்வுரைக்கும் விளக்கம் தந்தால்

காண்பதுவும் சுவைப்பதுவும் இறைமை ஒன்றே! இனியதமிழ் உணர்வுடனே கேட்டுக் கொண்டேன்

எளியவனின் வேட்கையினைத் தீர்க்க என்றே! 13