பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பரகாலன் பைந்தமிழ்

வந்து பிச்சை கேட்டு அவளுடைய வடிவழகைக்கண்டு காதல் கொண்டதும், தன் செல்வச் சிறப்பையும் வெற்றிக் சிறப்பையும் விரிவாகச் சொல்லித் தன்னைக் கணவனாக ஏற்றுக்கொள்ளுமாறு பிதற்றியதும், அதனைச் செவி, மடுத்த பிராட்டி மிக்க சினங்கொண்டு அவனை நோக்கிப் பல அவமானம் விளைவிக்கும் சொற்களைச் செப்பியதும், பின்பு இராவணன் தன் உண்மை உருவத்தைக் காட்டிப் பிராட்டியைத் தேரேற்றிக் கொண்டு போய் இலங்கையில் சிறை வைத்ததும் இதுவே காரணமாக அவன் நாசம் அடைந்ததுமான வரலாறு முன்னிரண்டு அடிகளில் குறிப் பிடப் பெற்றுள்ளது. கண்ணன் திருவாய்ப் பாடியில் திருவிளையாடல்கள் செய்தருளங் காலத்து ஆய்ச்சியர் கைப்பட்ட வெண்ணெயைக் களவாடி அமுது செய்ததும் அக்களவுத் தொழில்களை அவர்கள் எடுத்துக்காட்டி கண்ணனை எள்ளி நகையாடியதுமான வரலாறு பின்னிரண்டு அடிகளில் காட்டப் பெற்றுள்ளது. இத்தகைய வீரனும் எளியனுமான எம்பெருமானே திருவெவ்வுள்ளூரிலே திருக்கண்வளர்ந்தருள்கின்றதாக ஆழ்வார் திருவுள்ளங்கொள்ளுகின்றார்.

வடிவழகு மிக்க சீதையின்மீது காதல் கொண்ட இராவணனுடைய பொன்முடிகள் பத்தும் போர்க்களத் தில் உருளும்படி சரந்துரந்தவன் வீராகவன். இந்தச் சிரமந் தீர திருவெவ்வுள்ளுரில் திருக்கண்வளர்ந்தருள் கின்றான் (2). இராமாவதார காலத்தில் சிறிய திருவடி து துசென்றதால் பெற்ற ஏற்றத்தைக் கண்டு, அந்தக் குறைதீர, இழிகுலத்திலே வந்து பிறந்து பாண்டவர்களுக் காகக் கழுத்திலே ஓலைகட்டித் தூது சென்று பாண்டவ. தூதன் என்று பேர் பெற்றவன் இங்குக் கண்வளர்ந்தருள் கின்றான் (3). நப்பின்னைப் பிராட்டியை மணம் புரிவதற்காக அவளுடைய தந்தையின் நியமனப்படி ஒருவர்க்கும் அடங்காத ஏழு எருதுகளை வலியடக்கின பெருவீரனே இங்குக் கண்வளர்ந்தருள்கின்றான் (4).