பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 83

பாலனாகி ஏழுலகினையும் திருவமுது செய்து ஆலிலைமேல் பள்ளிக்கொண்டவனும் இவனே. (5). அந்த எம்பெருமான் இங்குப் பரத்துவமும் செளலப்பியமும் வாய்ந்த புருடோத்தமன். 'நம்பிசோத்தம்' என்று சொல்வித் தொண்டர்களால் அழைக்கப்படும் உயிர்த் தோழன். இப்படி எளியனாக அழைக்க உரியவனாக இருப்பினும் இவன் சாதாரணமானவன் அல்லன். தேவர்கட்கெல்லாம் மூத்தவன் என்றும், முக்கண்ணனுக்கு அந்தர் யாமியாக இருந்து செயலாற்றுபவன் என்றும் உண்மையை யறிந்த முனிவர்களால் தொழுதேத்தப் பெறுகின்றவன் (6). செயற்படும் பொருளகளையெல் லாம் தனக்கு உடலாகக் கொண்டு தான் அவற்றுக்கு ஆன்மாவாக இருப்பவன் இவனே. உலகங்களைப் படைத்த நான்முகனையும் படைத்தவன் இவனே. சாம வேதத்தால் பிரதிபாதிக்கப் பெற்றவனும் இவனே யாவன் (7). தனது திருமேனியில் ஒரு பக்கத்திலிருக்கும் சிவபெருமானும் உலகளந்த எம்பெருமானின் திருவடி களைத் தன் தலைமேல் சூட்டிக் கொண்டுள்ளான் (8). பெரிய பிராட்டியார் 'அகலகில்லேன் இறையும் என்று தங்கி வாழும் திருமார்பையுடையவன்; நீலமேனி சாமள வண்ணனாகிய இவன் தேவேந்திரனுக்கும் நாதன் (9). இப்பதிகத்திலுள்ள பலசுருதிப் பாசுரம் நீங்களாக ஒன்பது பாசுரங்களும் எவ்வுள் கிடந்தானே’ என்று முடிகின்றன. அடுத்து திருநின்றவூர் வருகின்றார் ஆழ்வார்.

2. திருநின்றலுனர் : நீர்வளமும் நிலவளமும் பொருந்திய ஊர். இதனால் இந்த ஊருக்கு இலக்குமி

2. திருகின்றவூர், இஃது ஒர் இருப்பூர்தி நிலையம்; நிலையத்திலிருந்து சுமார் ஒரு க்ல் த்ொலைவில் இருப்பது இத்திருத்தலம். எம்பெருமான்: பக்த வத்சலர் (பத்தராவிப் பெருமாள்) கிழக்கு நோக்கிய திருமூகமண்டலம் நின்ற திருக்கேர்லம்.