பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பரகாலன் பைந்தமிழ்

பொருந்திய தலம் எனப் பொருள்படும் 'திருகின்றவூர்” என்று பெயர் ஏற்பட்டதாகக் கருத இடம் உண்டு. இத் திருத்தலத்திற்கு ஆழ்வாரின் + தனிப்பாசுரமோ பதிகமோ இல்லை. திருக்கடல் மல்லை எம்பெருமானை மங்களா சாசனம் செய்யும்போது,

'கின்றவூர் நித்திலத்தை' என்றும், திருக்கண்ண மங்கை எம்பெருமானுக்குச் சொல் மாலை சாத்தும் போது,

“நின்றவூர் நித்திலத் தொத்தினை'

என்றும் மங்களா சாசனம் செய்து விடுவதைத்தான் காண முடிகின்றது. இந்த இரண்டு பாசுரத் தொடர் களிலும் எம்பெருமானின் நின்ற திருக்கோலம் காட்டப் பெறுகின்றது. ஆழ்வார் இத்திருத்தலத்திற்கு வந்ததாகக் கருதுவோரும், வரவில்லை எனக் கருதுவோரும் உண்டு. அடுத்து சென்னை வருகின்றார் ஆழ்வார்.

3. திருவல்லிக்கேணி : இத்தலத்து எம்பெரு

மானை ஆழ்வார் ஒரு திருமொழியால் (2.3) மங்களா சாசனம் செய்துள்ளார்.

រណ្ដៅ ៖ என்னைப் பெற்ற தாயார், பெரி. திரு. 2.5:2; 7.10:5 மேலும் விளக்கம் வேண்டுவோர் இந்த ஆசிரியரின் 'தொண்டை நாட்டுத் திருப்பதிகள்” என்ற நூலில் 9-வது கட்டுரை காண்க. பெரி. திரு. 2.5:2

டிெ 7.10:1 5. விவரம் தொண்டை நாட்டுத் திருப்பதிகள்'

(9-வது கட்டுரை) - பக் 146-148 காண்க. 3. திருவல்லிக்கேணி : சென்னையில் ஒரு பகுதி மெரீனா கடற்கரையிலுள்ளது. பார்த்த் சார்தி, மந்நாதன், சக்கரவர்த்தித் திருமகன், தெள்ளிய

.