பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 85.

விற்பெரு விழவும், கஞ்சனும் மல்லும்

வேழமும் பாகனும் வீழச் செற்றவன் தன்னை, புரம் எரி செய்த

சிவன் உறு துயர்களை தேவை பற்றலர் வியக் கோல்கையில் கொண்டு

பார்த்தன்தன் தேர் முன் நின்றானை, சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே (1)

(வில்பெருவிழவு-கம்சன் தன் வில்லுக்கு எடுத்த பெருவிழா; மல்-மல்லர்கள்; வீழ-நாசம் அடைய; வேழம்-யானை (குவலயா பீடம்); களை-போக் கும்; பற்றலர்-பகைவர்; வீய-மாள; சிற்றவைகையேயி)

என்பது முதற் பாசுரம், திருவல்லிக்கேணியில் எழுந்தருளி யிருக்கும் எம்பெருமான் எப்படிப்பட்டவன்? கம்சன், மல் லர்கள், குவலயாபீடம், பாகன்-இவர்களை முடித்து வில் விழாவையும் முடித்தவன்; சிவனது சாபத்தைப் போக்கிய வன். சாட்டை பிடித்து பார்த்தனுக்குச் சாரதியாக நின்ற வன்; சிற்றன்னையின் சொல்லால் முடிதுறந்தவன் (1).

சிங்கர், தேவப்பெருமாள் (வரதராசர்) ஆகிய ஐந்து மூர்த்திகளாலும் ஆழ்வாரால் மங்களா சாசனம் பெற்றவர்களாதலின் இது பஞ்சமூர்த்தி தலம் என்று வழங்கப் பெறுகின்றது. கருவறை எம்பெருமான்: வேங்கடக்கிருஷ்ணன்; மூலவர் நின்ற திருக்கோலம்: கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம், உற்சவர்: பார்த்தசாரதி தாயார் : உருக்குமினிப் பிராட்டியார். இவ்ர் எம்பெருமான் பக்கத்தில் நின்று சேவை சாதிக்கின்றார். பெரி, திரு 2.3 (பதிகம்). மேலும் விவரங்களை அறிய வேண்டுவோர் இந்த ஆசிரி யரின் தொண்டை நாட்டுத் திருப்பதிகள் என்ற நூலில் 10-வது கட்டுரை காண்க.