பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 87

நன்றாய புனல் நறையூர் திருவாலி

குடந்தை தடந்திகழ் கோவல்நகர் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தார்க்கு

இடம்மா மலையாவது நீர்மலையே (1) (ஆயர் குலக்கொடி-நப்பின்னை; அணிமாமலர் மங்கை-உ ரு க் கு மி ரிை ; அவுனர்-இராக்கதர்புனல்-தீர்த்தம்: குடந்தை-கும்பகோணம்; தடம்: தடாகம்; கோவல் நகர்-திருக்கோவலூர்}

என்பது முதற் பாசுரம். திருநறையூரில் நின்ற திருக்கோல் மாகவும், திருவாலியில் நரசிங்க உருவில் வீற்றிருந்த திருக் கோலமாகவும், திருக்குடந்தையில் சயனத் திருக்கோலமா கவும், திருக்கோவலூரில் உலகளந்த திருவடிகளை நீட்டி நடக்கும் திருக்கோலமாகவும் சேவை சாதிக்கும் எம்பெரு மான் இந்த நான்கு வகைத் திருக்கோலங்களையும் இந்தத் திவ்விய தேசம் ஒன்றிலேயே கொண்டருளிச் சேவை சாதிக்கும் திருக்குணத்தை ஆழ்வார் அநுபவித்துப் பேசு கின்றார். அடிவாரத்தில் நீர்வண்ணர் (நின்ற திருக் கோலம்), மலையின் மீது சாந்நரசிம்ம மூர்த்தி (இருந்த திருக்கோலம்), அரங்கநாதர் (கிட்ந்த திருக்கோலம்) உல களந்த மூர்த்தி (நடந்த திருக்கோலம்) சேவை சாதிப்பதை இன்றும் நாம் காண்கின்றோம்.

மலைமீது (1) அரங்கநாதர் (சயனத் திருக் கோலம்); தெற்கு நோக்கியதிருமுக மண்டலம், அவர் முன்னதாக அரங்க நாயகி. (2) சுற்று வழி யில் உலகளந்த மூர்த்தி (நடந்ததிருக்கோலம்); சாந்த நரசிங்கமூர்த்தி (இருந்த திருக்கோலம். சக்ரவர்த்தின் திருமகன் (அடிவாரத்தில்) பெ. திரு. 2.4 (பதிகம்); 2.7:8: 5.2:8; 6 8:4; 7.1:7; 8.2:3; 9.2.8; 10.1:1; திருநெடுந் 13:சிறி. திருமடல் (39); பெரி. திருமடல் (67), மேலும் விவரம் அறிய வேண்டுவோர் இந்த ஆசிரியரின் தொ. நா. தி என்ற நூலில் 11-வது கட்டுரை 乐醇余筠”巴芬,