பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$క్టి பரகாலன் பைந்தமிழ்

இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் எப்படிப் பட்டவன்? காண்டவ வனத்தை அக்தி பகவான் உட்கொள்ள நியமித்தவன்; பாரதப் போரில் பூமியின் பாாங்களைத் தீர்த்து உலகங்களைக் காப்பாற்றியவன்; இரணியனின் மார்பைப் பிளந்தவன்: வாமனனாய் வந்து திரிவிக்கிரமனாய் வளர்ந்தவன் (2). திருமேனியில் திருவாழி யையும் கலப்பை, சங்கு இவற்றையும் தரித்துக் கொண் டிருப்பவன்; பாரதப் பெரும்போரில் திருவாழியினால் பகலவனை மறைத்தவன்(3). இரணியனை மாய்த்து அவன் பேண்டிர்களைத் தீக்குளிக்கச் செய்தலன். பாண்டவ சகாயனாயிருந்து நூற்றுவரை மாள்வித்தவன்; பாஞ்சாவியின் மானத்தைக் காத்தருளினவன் (4). சேது கட்டி இலங்கை சென்று இராவணனை நான்முகன் கணையினால் கொன்றொழித்தவன்(5). பாலனால் எழுலகுண்டும், 'இன்னும் வயிறு நிறையவில்லையே' என்றவன்; சத்திரியப் பூண்டை பரசுராமனாகத் தோன்றி ஒழித்தவன். நீர்வண்ணன் என்னும் திருநாமத்தை யுடையவன்(6). பெளண்ட்ரக வாசுதேவனைப் பரலோகத் திற்கு அனுப்பியவன்; இரணியனுடைய மார்பைப் பிளந்து அவனைக் கொன்றொழித்தவன்(?).

இவ்வாறு எம்பெருமானுடைய வீரச் செயல்களைப் பேசி அநுபவித்த ஆழ்வார் திருநீர் மலையின் சிறப் பினைச் சொற்களால் பேசித் தலைக்கட்ட முடியாது.நான் சொல்லுவதை இப்போது நீங்கள் கேட்பீர்களாக. இத் திருப்பதி தன்னைப் பணிவார்களின் வினைகளை வேருடன் களைந்துவிடுமாதலின், இதுவே நாம் உய்வதற்கு உரிய இடமாகும். புலன்வழியொழுகி மதிகெட்ட நீசர்கள் சென்று கிட்டமுடியாத எம்பெருமான் இங்கு திருக்கோயில் கொண்டுள்ளான். ஆகவே அவன் இருப்பிடம் செல்வோம், வாருங்கள்!” என்று தாயுமான அடிகள் சேர வாரும்