பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 89.

செகத்திரே' என்று அழைப்பதுபோல் நம்மை அழைக் கின்றார் ஆழ்வார். பின்னர் கடல் மல்லைக்கு ஏகுகின்றார்.

5. திருக்கடல் மல்லை: இத்திருத்தலத்தை இரண்டு திருமொழிகளால் (2-5;2-6) மங்களாசாசனம் செய் துள்ளார் ஆழ்வார். எம்பெருமானின் சயனத் திருக் கோலம் கண்டோர் மனத்தைக் கவரத் தக்கது. இந்தக் சயனத் திருக்கோலத்திலும் பலவகை உண்டு. 108 திவ்விய தேசங்களில் அவர் கிட்டத்தட்ட இருபதில் அனந்தன்மீது சயனம் கொண்டுள்ளார். இதனைப் பாம்பனைப் படுக்கை (புயங்க சயனம்) என்று வழங்குவர். ஏனைய இடங்களில் உள்ளவை:உத்தியோக சயனம், தர்ப்பசயனம் (புல்படுக்கை-புல்லனை), போக சயனம் (இன்பப் படுக்கை), மாணிக்க சயனம், வடபத்திர சயனம் (ஆலிலைப் பள்ளி), வீரசயனம் என்பவையாகும். மாமல்ல புரத்தில் எம்பெருமான் கொண்டுள்ள திருக்கோலம் மேற்கூறிய வகையுள் ஒன்றிலும் அடங்காது. இங்கு வெறுந் தரையில் படுத்துக் கிடக்கின்றான். இறைவன் படுக்கப் பாயும் இன்றி தலைக்கு அணையும் இன்றித் தரையில் கிடக்கின்றான். இதனைத் தல சயனம்’ என்றே

7. காடும் கரையும்-என்ற மூன்று பாடல்களில், 8. திருக்கடல்மல்லை : மாமல்லபுரம் என இன்று வழங்கும் இடம். சென்னையிலிருந்து 37 கல் தொலைவு கடற்கரைத் தலம். காஞ்சியிலிருந்தும் செங்கற்பட்டுவிலிருந்தும் இவ்வூருக்கு வர்லாம். பேருந்து வசதி உண்டு. எம்பெரும்ான் தலசயனப் பெருமாள். கிடந்த திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக மண்டல்ம் தயிார் நிலமங்கை நாச்சியார். . பா : பெரி திரு. 2.5; 2.6 (பதிகங்கள்)! 3:5: 8; 7 : 4; திருக்குறு. 19); திருநெடும் 9; சிறி-திருமால் (39); பெரி திருமடல் (58) மேலும் விவரம் வேண்டுவோர் தொ.நா.தி. என்ற நூலில் 13-வது கட்டுரை காண்க.