பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟾 பரகாலன் பைந்தமிழ்

வடிவாக லத்த கேசி என்னும் அசுரது வாயைக் கிழித் தெறித்து அவனைக் கொன்றவன்; கம்சனின் ಅಖಲಗ್ பீடம் என்ற யானைகளின் கொம்புகளைப் பறித்து முறித்தெறிந்தவன்; அருச்சுனனைக் கருவியாகக் தொண்டு காண்டவ வனத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தவன்; தஞ்சு தடவப் பெற்ற முலையுடன் பாலூட்ட வந்த பூதனையிடம் பாலமுதம் பருகி அவளது உயிரையும் குடித்து வித்தகன்; கோகுலங்கள் ஆநிரைகள் தளராமல் குன்றம் ஏந்திக் கல் மாரி தடுத்தவன் ஆயர் பாடியில் சேமித்து வைத்திருந்த தயிர் வெண்ணெய் அனைத்தையும் அமுது செய்து களித்தவன். இடைப்பெண்களோடு குரவைக் கூத்தாடியவன். அடுக்கின குடங்களைக் கொண்டு குடக்கூத்து ஆடியவன்; பாண்டவர்க்காகத் து.ாது சென்றவன்; பொய்யாசனம் இடுவித்து நிலவறை யில் நிறுத்தி வைத்த மல்லர்கள் யாவரையும் ஒருசேரக் கொன்றொழித்த மாவீரன். இத் திருமொழியை (2.5) ஓத வல்லவர்கள் முன்னைத் தீவினைகளை வேரோ உறுத்துத் தொலைத்திட்டு நித்தியானந்தம் அதுபவிக்கப் பெறுவார்கள் என்று பலன் சொல்லித் பதிகத்தைத் தலைக் கட்டுகின்றார்.

அடுத்த திருமொழி (2.6)யில் ஆழ்வார் தாம் பாகவத பக்தியில் ஊறினபடியை வெளியிடுகின்றார். பாகவத. பக்தி என்பது, பகவத் பக்தியின் எல்லை நிலமாக உண் 1.ாவது. ஆகவே,

தண்ணார்ந்த கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை எண்ணாதே இருப்பாரை

இறைப்பொழுதும் எண்ணோமே (1) என்று கூறுவர். இந்தக் கருத்திலேயே ஒவ்வொரு பாசுர மும் முடிவுறுகின்றது. கடல் மல்லையில் வராக மூர்த்தி பின் திருக்கோயில் ஒன்றும் உண்டு. இஃது ஒரு குகைக்