பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 33

கோயில். இந்தக் கோயிலில் பூசை முதலியன நடைபெறு கின்றன. இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் சூானப்பிரான்' என்ற திருநாமத்தையுடையவர். இவரை ஆழ்வார்,

ஞனத்தின் உருவாகி

நிலமங்கை எழில்கொண்டான் வானத்தில் அவர் முறையால்

மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள, கானத்தின் கடல்மல்லைத்

தலசயனத்து உறைகின்ற ஞானத்தின் ஒளியுருவை

நினைவார் எம்நாயகரே (3)

இஞனம்-வராகம்; நிலமங்கை-பூமிப் பிராட்டி யார், எழில்-அழகு; வானத்தில் அவர்-தேவர் கள்; ஏத்தி-துதித்து; கானம்-காடு; நாயகர்தலைவர்}

என்ற பாசுரத்தால் மங்களாசாசனம் செய்து மகிழ்கின் றார். வராகப் பெருமானுக்கு ஞானப்பிரான்' என்று திருநாமம் வழங்குதல் வைணவ சம்பிரதாயம். அது தோன்றவே பாசுரத்தில் ஞானத்தின் ஒளி உரு எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது". இங்கு எம்பெருமான் தனது வலக் காலை ஆதிசேடன் மீது வைத்துக் கொண்டும்

11. ஞானப்பிரானைப் பற்றியும் ஒரு வரலாறு ஒன்று உண்டு. இதன்ை தொண்டை நாட்டுத் திருப்பதிகள் என்ற நூலில் பக். 221-222-இல் கண்டு தெளிக. ox 12. திருவிருத்தம்-99 இலும் நம்மாழ்வார் ஞனத் துருவர்ய் இடந்த பிரான் ஞானப் பிர்ான்' என்று அருளியுள்ளதை ஈண்டு நினைவு கூரலாம்.