பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 99.

அடுத்து ஆழ்வார் திருக்கடிகை என்ற தலத்தை நோக்கி வருகின்றார்.

7. திருக்கடிகை : இப்பெயரால்தான் ஆழ்வார் கள் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். "கடிகை என்ற சொல்லுக்கு நாழிகை என்பது பொருள் பிரகலாதனுடைய மகிழ்ச்சியின் பொருட்டு ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் யோக நிலையில் நரசிம் மன் தோன்றியிருந்த காரணத்தால் இது கடிகாசலம்’ என்ற பெயரால் வழங்கி வருவதாகக் கூறுவர் பெரியோர். நாம் ஒரு நாழிகை காலம் இத்தலத்தில் தங்கியிருநதாலும் நமக்கு முக்தி உண்டு என்பது செவிவழிச் செய்தி.

இந்த எம்பெருமானைத் திருமங்கையாழ்வர் ஒரே ஒரு பாசுரத்தால் மங்களா சாசனம் செய்துள்ளார். ஒரு பாசுரம் என்றாலும் ஒப்பற்றதாக விளங்குவது அது. எத்தனை தரம் வேண்டுமானாலும் ஓதி உளங்கரைய லாம்.

17. திருக்கடிகை : இது சோழசிங்கபுரம் (சோளிங் கர்) என வழங்கிவருகின்றது. பண்டைக் காலத்தில் இவ்வூருக்கு வழங்கி வந்த பெயர் கடிகாசலம் என்பது. திருத்தணியிலிருந்து இவ்வூருக்குப் பேருந்து வசதி உண்டு தென் னிந்திய இருப்பூர்தி வழியில் (அரக்கோணம் காட்பாடி கிளை வழியில்) சோளிங்கர் ஒரு நிலையமாக இருப்பினும் நிலையத்திலிருந்து ஆ கல் தொலைவிலுள்ள இத்திருத்தலத்திற்கு வர வசதிகள் குறைவு. திருத்தணி அரக் கோணத்திலிருந்து வருவதே சிறந்தது. எம்பெரு மான் யோக நரசிம்மர்; இருந்த திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார்: அமிர்தவல்லி. பெரி. திரு. 8. 9: 4, 9, சிறி திருமடல் (39). மேலும் விவரம் வேண்டு வோர் ஆசிரியரின் தொ. கா. தி. என்ற நூலின் 7-வது கட்டுரை காண்க.