பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}{} பரகாலன் பைந்தமிழ்

மிக்கானை மறையாய்விரிந்த விளக்கை, என்னுள் புக்கானைப் புகழ்சேர்

பொலிகின்ற பொன்மலையை தக்கானைக் கடிகைத்

தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை

அடைந்(து) உய்ந்து போனேனே'

(மிக்கான்-சிறந்தவன்; மறை-வேதம்; புகழ்கீர்த்தி, பொலிகின்ற-விளங்குகின்ற; தக்கான். தகவுடையவன்; அக்காரம்-வெல்லக்கட்டி; உய்ந்து-பிழைத்து)

என்பது ஆழ்வார் பாசுரம். யோக நரசிம்மர் சற்றேறக் குறைய 400 அடி உயரமுள்ள ஒரு மலையின்மீது எழுந்தருளியுள்ளார்.

இந்த எம்பெருமான் எப்பொழுதும் மாலை அலங் காரத்துடன் எழுந்தருளியிருப்பவன். கம்பீரமான உருவத்தன், கண்களிலே சாந்தம் நிலவும் தன்மையன். இதனால்தான் ஆழ்வாரும் தக்கான் (தக்க பெருமையை யுடைய பரம தயாளு) என்றும், அநுபவிப்பவர்கட்கு அவன் வெல்லம்போல இனிப்புள்ள கனியாக-விளங்கனி யாக விளங்குகின்றான் என்றும் இத்தலத்து எம்பெரு மானைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். இந்த யோக மூர்த்தியைப்பற்றி ஒரு புராண வரலாறு உண்டு.19 வெல்லக் கட்டியையே விதையாகக் கொண்டு ஒரு

18. பெரி. திரு. 8.9:4. சிறிய திருமடலிலும் $ என்ற பெயர் வருகின்றது ಫ್ಲಿ) 4ణతో

19. தொண்டை காட்டுத் ப்பதிகள் (கட்

பக். 121, 122. த் திருப்பதிகள் (கட்டுரை-7)